Heroism in the Liberation War | "விடுதலைப் போரில் வீரத்தமிழகம்" - Thulirkalvi

Latest

Sunday 14 August 2022

Heroism in the Liberation War | "விடுதலைப் போரில் வீரத்தமிழகம்"

தமிழ்நாடு அரசின் சார்பில் "விடுதலைப் போரில் வீரத்தமிழகம்" - என்ற முப்பரிமாண ஒளி-ஒலிக் காட்சியினை 15.08.2022 அன்று நண்பகல் 12.00 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைக்கப்படுகிறது. 

சென்னை கலைவாணர் அரங்கத்தில் 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட தேசத் தலைவர்களைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள "விடுதலைப் வீரத்தமிழகம்" என்ற முப்பரிமாண ஒளி-ஒலிக் காட்சி வைக்கப்படுகிறது. 

போரில் திறந்து 200 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டங்கள், ஆங்கிலேயரின் அடக்குமுறைகள். சுதந்திரத்தின் அருமை ஆகியவற்றை இளம் தலைமுறையினரிடையே கொண்டு செல்லும் நோக்கில் இந்த முப்பரிமாண ஒளி-ஒலிக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இக்கண்காட்சியில் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்குப் போராடிய அரும்பெரும் தலைவர்கள் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் கொண்ட மாதிரிகளை வடிவமைத்து, அவர்களின் வீரதீரச் செயல்கள் மற்றும் தியாகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தென்னகத்தில், குறிப்பாக வீரம் விளைந்த நம் தமிழகத்தில் தான் முதல் சுதந்திரப் போர் ஆரம்பமானது. வேலூர்க் கோட்டையில் நடைபெற்ற சிப்பாய்களின் புரட்சிதான் இந்தியாவில் நடந்த முதல் விடுதலைப் போராகக் கருதப்படுகிறது. 

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் அழகுமுத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரமங்கை வேலுநாச்சியார், குயிலி, மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை போன்ற வீர மறவர்களின் போராட்டங்களும், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, மகாகவி பாரதியார், பெரியார், மூதறிஞர் இராஜாஜி, திருப்பூர் குமரன், காமராஜர், கண்ணியத் தென்றல் காயிதே மில்லத், ஜே.சி. குமரப்பா, பசும்பொன் முத்துராமலிங்கம், கடலூர் அஞ்சலை அம்மாள் போன்ற எண்ணற்ற தலைவர்களின் தியாகங்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.


இந்திய விடுதலைக்கு வித்திட்ட முத்தாய்ப்பான மூன்று போராட்டங்களான ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய நிகழ்வுகளும் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இந்த முப்பரிமாண ஒளி-ஒலிக் காட்சி 15.08.2022 முதல் 25.08.2022 வரை காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை காட்சிப்படுத்தப்பட உள்ளது. இக்கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை, அனுமதி முற்றிலும் இலவசம். பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆகியோர் இந்த முப்பரிமாண ஒளி-ஒலிக் காட்சியினைப் பார்வையிட்டுப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

On behalf of the Government of Tamil Nadu, a three-dimensional light and sound show titled "Veerathamizhakam in Liberation War" will be inaugurated on 15.08.2022 at 12.00 noon at Kalaivanar Arena, Chennai. On the occasion of the 75th year of independence in Chennai Kalaivanar Arangam, a three-dimensional light and sound display called "Vidkuthai Veerathamizhagam" is being put on to honor the national leaders who fought for India's freedom on behalf of the Department of Press and Public Relations. 200 years of freedom struggle in Tamilnadu after the opening of the war, oppression by the British. This three-dimensional light-sound show is organized with an aim to bring the beauty of freedom to the young generation. 

 The exhibition showcases the heroic deeds and sacrifices of the great leaders who fought for the freedom of India and modeled historical events. The first war of independence started in the south, especially in our brave Tamil Nadu. The revolution of the soldiers at Vellurg Fort is considered to be the first war of liberation in India. Struggles of heroes like Pulithevan, Ondiveeran, Veeran Akumuthukkon, Veerapandiya Kattabomman, Veeramangai Velunachiyar, Quili, Maruthu Brothers, Theeran Chinnamalai, who participated in the liberation struggle, Tamil sailor V.U. Kamarajar, Kanyath Theral Kaithe Millath, J.C. The sacrifices of countless leaders like Kumarappa, Pasumbon Muthuramalingam, Cuddalore Anjalai Ammal are also on display. 

 The events of the three major struggles that led to India's freedom, namely the Non-Cooperation Movement, the Civil Disobedience Movement, and the White Quit Movement, are also featured in this exhibition. This 3D light-sound show will be on display from 15.08.2022 to 25.08.2022 from 9.00 am to 8.00 pm. There is no entry fee for the exhibition and admission is absolutely free. Public, youth, school and college students are requested to visit and benefit from this three-dimensional light-sound display. Hon'ble Ministers, Members of Parliament, Legislative Assembly, Mayor, Deputy Mayor and representatives of local bodies, senior government officials and members of the public are expected to attend the event.

No comments:

Post a Comment