பார்வை 1ல் காண் அரசாணை எண் 525ன்படி மாணாக்கர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதாவது கடந்த 2024-25ம் ஆண்டில் 01.08.2024 நிலவரப்படி முதுகலையாசிரியர்கள் பணியிடங்கள் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பணியாளர் நிர்ணயம் (Staff Fixation) செய்யப்பட்டது. அதே போன்று நடப்புக் கல்வியாண்டிலும் 01.08.2025 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலையாசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பாக கீழ்க்காணும் அறிவுரைகளைப் பின்பற்றி பணியாளர் நிர்ணயம் செய்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
பார்வை 2ல் காண் அரசாணை 46ன்படி ஆசிரியர்கள் பாடவேளைகள் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதாவது தமிழ் மற்றும் ஆங்கிலப்பாட ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவிற்கு 4 பாட வேளைகள் என வாரத்திற்கு குறைந்தபட்சம் 24 பாடவேளைகள் எனவும், இதர அனைத்து LUITL ஆசிரியர்களுக்கு ஒரு குறைந்தபட்சம் 28 பாடவேளைகள் என்ற அடிப்பலை விலும் பணியாளர் நிர்ணயம்
40 காண் அரசாணை 217 கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்நிலைப்பிரிவுகளைப் பொறுத்தவரை 11 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு 1:40 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரத்தினையே பின்பற்ற வேண்டும் Section bifurcation table இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஒவ்வொரு பாடத்தொகுதி / பிரிவிற்கும் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள பகுதி நகராட்சி/மாநகராட்சி பகுதியாக இருப்பின் குறைந்த பட்சம் 30 மாணவர்களும், ஏனைய ஊரக பகுதியாக இருப்பின் குறைந்த பட்ச மாணவர் எண்ணிக்கை 15 ஆக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாடவேளைகள் கணக்கிடுதல்
ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யும்போது ஓராசியருக்கு, வாரத்திற்கு குறைந்தபட்சம் 28 பாடவேளைகள் ஒதுக்கீடு உள்ளதா என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். மேல்நிலை வகுப்புகளில் மொழிப்பாடத்தில் வாரத்திற்கு குறைந்தபட்சம் 24 π பாடவேளைகள் எனவும், இதர அனைத்து பா ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு குறைந்தபட்சம் 28 பாடவேளைகள் என்ற அடிப்படையிலும் கணக்கீடு செய்ய வேண்டும்.
கூடுதல் தேவை பணியிடங்கள்
மொழிப்பாடத்தில் 24 பாடவேளைக்கும். முதன்மைப் பாடத்தில் 28 பாட வேளைகளுக்கும் கூடுதலாக இருப்பின் இதற்கென ஒரு ஆசிரியரை கூடுதலாக நிர்ணயம் செய்யலாம்.
ஆசிரியருடன் உபரி பணியிடங்கள்
ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யும்போது ஒரு குறிப்பிட்ட பாடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து, அதில் ஒரு பணியிடம் ஆசிரியருடன் உபரி பணியிடமாக இருக்குமாயின் அப்பாடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களில் இளையோரை (Station Junior) ஆசிரியருடன் உபரியாக காண்பிக்கப்பட வேண்டும். பார்வை 5ல் காண் அரசாணையில் ஒருமுறை பணிநிரவல் மூலம் மாறுதல் செய்யப்பட்டவர்களை அடுத்த மூன்று கல்வியாண்டுகளுக்கு மீண்டும் பணிநிரவல் உல்லக்கூடாது. அவ்வாறான நிகழ்வுகள் எழும்போது சார்ந்த ஆசிரியர் பணிநிரவலுக்கு உட்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை முன்னிலைப்படுத்தி மீண்டும் பணிநிரவல் செய்யப்படுவதிலிருந்து தவிர்ப்பு பெறலாம்
எனினும், சென்ற ஆண்டு ஆசிரியருடன் உபரியாக கண்டறியப்பட்டு, பணிநிரவல்மூலம் தற்போதைய பள்ளியில் பணிபுரியும் மேற்காண் ஆசிரியர், இந்த ஆண்டில் தயார் செய்யப்படும் பணியாளர் நிர்ணயத்தின்போதும் ஆசிரியருடன் உபரியாக காண்டுப்பதற்கு விருப்பம் தெரிவித்தால் அன்னா பணியாளர் நிர்ணயத்தின்போது காண்பிக்கப்படவேண்டும். ஆசிரியருடன் தற்போதைய உபரியாகக்
மேற்கண்ட அறிவுரைகளை தவறாது பின்பற்றி 01.08.2025 அன்றுள் அரசு /நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் சார்பான பணியாளர் நிர்ணய வரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட தேதிகளில் நேரில் உரிய பிரிவில் (W2) ஒப்படைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.