பொருள்: பள்ளிக்கல்வி 2025-26 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை மானியக் கோரிக்கை
எண் 43 மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு எண் 07 10
மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெறும் அரசுப்
பள்ளிகளுக்கும், 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும்
பாராட்டுச்சான்றிதழ் வழங்குதல் -அரசாணை பெறப்பட்டது - சார்பு.
பார்வை
1.
அரசாணை(நிலை) στστ.111, பள்ளிக்கல்வித்(பக5(1))துறை, फ्रानं.15.05.2025.
2.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண். 0027/2/1/2025
02.05.2025. பார்வை 1ல் காணும் அரசாணையின்படி மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு
பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகளுக்கும். 100
விழுக்காடு தேர்ச்சி வழங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டுச்சான்றிதழ்
வழங்க 2024-25 ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தும் பொருட்டு பார்வை 2ல்
காணும் செயல்முறைகளில் இணைத்து அனுப்பப்பட்ட படிவம் 1 முதல் 7 வரையில் உள்ள
விவரங்களை பூர்த்தி செய்து முதன்மைக் கல்வி அலுவலர் ஒப்பத்துடன் அனுப்பிட
தெரிவிக்கப்பட்டது. தற்போது 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் பொதுத்தேர்வு முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ள நிலையில் பார்வை 2ல் காணும் கடிதத்தில் இணைத்து அனுப்பப்பட்ட
படிவத்துடன் அரசாணை நகலினையும் இணைத்து தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு
உயர்/ மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுப்பிடவும் தெரிவிக்கலாகிறது. மேலும்,
அப்பள்ளிகளிலிருந்து பெறப்படும் விவரங்களை தொகுத்து அவ்வறிக்கையினை முதன்மைக் கல்வி
அலுவலர் ஒப்பத்துடன் 22.05.2025 மாலைக்குள் isectiondse@gmail.com என்ற மின்னஞ்சல்
முகவரிக்கும். இவ்வியக்ககத்திற்கும் அனுப்பி வைக்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.