மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்
அவர்கள் இன்று (12.02.2025) ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற அரசு
மற்றும் அரசு நிதி உதவி பெறும் இல்ல குழந்தைகளுக்கான மாநில அளவிலான விளையாட்டுப்
போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிக்கும் விழாவில்
ஆற்றிய உரை இந்த விளையாட்டு மைதானத்தில் பல்வேறு சமயங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில்
நான் கலந்து கொண்டு இருக்கின்றேன்.
தேசிய, சர்வதேச போட்டிகள் இந்த விளையாட்டு
மைதானத்தில் நடைபெற்றுள்ளன. ஆனால் எந்த நிகழ்ச்சியிலும் இல்லாத அளவிற்கு இந்த
நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் எழுச்சியோடு, உற்சாகத்தோடு, சிரித்த முகத்தோடு,
ஆரவாரத்தோடு கலந்து கொண்டுள்ளீர்கள். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக
அரசு மற்றும் நிதி உதவி பெறும் இல்லங்களைச் சார்ந்த குழந்தைகளுக்கு மாநில அளவில்
நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி
பெற்றோருக்கு பரிசளிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன், உங்களை எல்லாம்
சந்திப்பதில் மிகுந்த பெருமை அடைகின்றேன்.
தமிழ்நாடு முழுவதும் இருந்து 183 அரசு
மற்றும் அரசு நிதி உதவி பெறுகின்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும்
இல்லங்களில் உள்ள குழந்தைகளின் தனித்திறமையைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்க
வேண்டும் என்ற நோக்கில், நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான
நம்முடைய திராவிட மாடல் அரசு இந்த கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை
மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறது. உங்களுடைய கலை நிகழ்ச்சிகளையும்,
விளையாட்டுத் திறமையையும் குறித்து நான் ஏற்கனவே நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.
இருந்தாலும், உங்களை எல்லாம் நேரில் சந்திக்கின்றபோது, உண்மையிலேயே மிகப்
பெரியளவில் மகிழ்ச்சியும், உற்சாகமும் பிரம்மிப்பும் ஏற்படுகின்றது.
முத்தமிழறிஞர்
டாக்டர் கலைஞர் அவர்கள். தமிழ்நாட்டு குழந்தைகள் சத்தாக வளர வேண்டும் என்று மதிய
உணவோடு முட்டை வழங்கினார்கள். இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.
குழந்தைகளின் நலன் கருதி முதலமைச்சர் காலை உணவுத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி
வருகின்றார்கள். உங்களுடைய இல்லங்களிலும் 1இன்றைக்கு சத்தான உணவு வகைகள்,
உங்களுக்குத் தேவையான பொருட்களை நம்முடைய அரசு தொடர்ந்து வழங்கி வருகின்றது. அதனால்
தான் ஒரு தந்தை, ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து நம்முடைய முதலமைச்சர் அவர்கள்
தமிழ்நாட்டில் உள்ள அத்தனை குழந்தைகளையும் போற்றி பாதுகாத்து வருகின்றார்.
அதனால்
தான் இன்றைக்கு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திற்கு சென்று
குழந்தைகளை சந்திக்கும்போதும் ஒவ்வொரு குழந்தையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை
உரிமையோடு. அன்போடு, உற்சாகத்தோடு அப்பா, அப்பா.. என்று அன்போடு அழைத்துக்
கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு குழந்தைகள், மாணவர்கள் நலனுக்காக எந்தெந்த
வகையில் எல்லாம் திட்டங்களைசெயல்படுத்த முடியுமோ, அந்தந்த வடிவங்களில் எல்லாம்
நம்முடைய திராவிட மாடல் அரசு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றது. அந்த
வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறுகின்ற இல்லங்களில் உள்ள குழந்தைகள் உள்ளம் மகிழ
வேண்டும். உங்கள் திறமைகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்று. இந்த கலை நிகழ்ச்சிகள்
மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளன.
எல்லாருக்கும் சமமான
வாய்ப்பு என்பதைத் தாண்டி, யார் யாருக்கு என்னென்ன தேவை என்பதை உணர்ந்து, அதை
எப்படி கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுவதுதான் உண்மையான
சமூக நீதி. அந்த வகையில் தான். நம்முடைய திராவிட மாடல் முதலமைச்சர் அவர்கள் பல்வேறு
திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு இங்கு வந்திருக்கக்கூடிய
நீங்கள் அத்தனை பேரும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. உண்மையிலேயே சமூக நலத்துறைக்கு
எங்களுடைய விளையாட்டுத்துறை சார்பில் நாங்கள் நன்றி தெரிவிக்க வேண்டும்.
ஏனென்றால்,
நாங்கள் விளையாட்டுத்துறை திறமையாளர்களை கண்டறிய வேண்டும் என்று எங்கள் துறை
சார்பில் ஏராளமான முயற்சிகளை எடுத்து வருகிறோம். உதாரணத்திற்கு கலைஞர் ஸ்போர்ட்ஸ்
கிட் திட்டம். முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள். தமிழ்நாடு சாம்பியன்ஸ்
அறக்கட்டளை இப்படி ஏராளமான திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த
முன்னெடுப்புகளின் மூலம் பல்லாயிரக்கணக்கான இளம் விளையாட்டு வீரர்களை நாங்கள்
அடையாளம் கண்டு வருகிறோம். இன்னும் கூடுதலான விளையாட்டு வீரர்களை அடையாளம்
காண்பதற்கு நம்முடைய சமூக நலத்துறை நடத்தும் இது போன்ற நிகழ்ச்சிகள் நிச்சயம்
எங்களுக்கு பேருதவியாக இருக்கும். அதே போல தனித்திறமை மிக்க மாணவர்களை அடையாளம் காண
பள்ளிக்கல்வித்துறை சார்பாக, 2கலைத்திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம்
நடைபெறுகின்றன.
தொடர்ந்து இந்த நிகழ்ச்சிகளுக்கு sponsored செய்து கொண்டிருக்கின்ற
ஐஓசிஎல் நிறுவனம். நலந்தாவே foundation அவர்களுக்கும் இந்த நேரத்தில்
பாராட்டுக்களையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இதுபோன்ற
நல்ல நிகழ்ச்சிகளுக்கு உங்களுடைய ஆதரவு அரசிற்கு என்றுமே தேவை. இங்கே சமூக
நலத்துறையானது. விளையாட்டு, கலை சார்ந்த நிகழ்ச்சிகளை, ஒன்றாக நடத்தி இருக்கிறது.
எனவே மீண்டும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் இவ்வளவு மாணவர்களை ஒரே இடத்தில் சந்திப்பதற்கான வாய்ப்பை
ஏற்படுத்திக் கொடுத்த அமைச்சர் அக்கா கீதா ஜீவன் அவர்களுக்கு மீண்டும் என்னுடைய
நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதேபோல, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி
பெற்றுள்ளவர்கள். அடுத்தடுத்து விளையாட்டுத்துறையில் சாதிக்க நம்முடைய விளையாட்டு
மேம்பாட்டுத்துறை நிச்சயம் உங்களுக்கு என்றுமே உறுதுணையாக நிற்கும். அதே போல,
கலைத்துறையிலே சாதித்துள்ள தம்பிகள், தங்கைகள் அவரவர் தனித்திறனுக்கு ஏற்ப வாழ்வில்
உயரங்களைத் தொடுவதற்கும் ஒரு அண்ணனாக நான் என்றும் துணை நிற்பேன் என்று
கூறிக்கொண்டு இந்த மாபெரும் விழாவில் வெற்றி பெற்று பரிசுகளை வென்ற அத்தனைப்
பேருக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து வாய்ப்புக்கு நன்றி கூறி
விடைபெறுகிறேன் என்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.