21.02.2025 அன்று நான்கு உறுப்பினர்கள்
திரு.செ.செல்வகுமார், முனைவர் திரு.சு.ஆனந்தராஜா, திரு.மு.பொன்தோஸ்,
திரு.பொ.இளஞ்செழியன் ஆகியோர் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில
ஆணையத் தலைவர் முனைவர் நீதியரசர்.ச.தமிழ்வாணன் அவர்களின் முன்னிலையில்
உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நலத்துறை செயலாளர் திருமதி.க.லட்சுமிபிரியா, இ.ஆ.ப... ஆதிதிராவிடர்
நலத்துறை இயக்குநர் திரு.த.ஆனந்த, இ.ஆ.ப., பழங்குடியினர் நலத்துறை இயக்குநர்
திரு.ச.அண்ணாதுரை, ஆகியோர் ஆணைய உறுப்பினர்கள் திரு.செ.செல்வகுமார், முனைவர்
திரு.சு.ஆனந்தராஜா, திரு.மு.பொன்தோஸ், திரு.பொ.இளஞ்செழியன், திருமதி பிரியதர்ஷினி
மற்றும் உயர் அலுவலர்கள் பலர் கலந்துக்கொண்டனர். மேலும், ஆணையத்தின் செயல்பாடுகள்
குறித்தும் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் ஆணையத் தலைவர்கள்
அவர்கள் கலந்துரையாடி ஆலோசித்தார்