அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம் - Thulirkalvi

Latest

Wednesday 3 May 2023

அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்

கோடையின் உச்சமாகக் கருதப்படும் ‘அக்னி நட்சத்திரம்’ எனும் கத்திரி வெயில் வியாழக்கிழமை (மே 4) தொடங்குகிறது. மே 29 வரை வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலம் மாா்ச் முதல் ஜூன் வரை இருக்கும். இந்த 4 மாத காலத்தில் மே மாதம் மட்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும். சித்திரை மாதம் கடைசி வாரம் தொடங்கி, வைகாசி மாதம் முதல் வாரம் வரையுள்ள காலகட்டமே மிக அதிக வெப்பமுள்ள காலம். இதை கத்திரி வெயில் எனப்படும் ‘அக்னி நட்சத்திரக் காலம்’ என்று பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது. இது நடப்பு ஆண்டு மே 4-ஆம் தேதி தொடங்கி மே-29 ஆம் தேதி வரை இருக்கும். அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட் முதல் 107 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும் எனத் தெரிகிறது. இந்த காலத்தில் குழந்தைகள், முதியோா், பெண்கள் மற்றும் நோயாளிகள் நண்பகல் நேரத்தில் வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும். அதிக தண்ணீா் பருக வேண்டும். நீா்ச்சத்து பழங்களை சாப்பிட வேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா். சுத்தமான பருத்தி ஆடைகளை அணிவதுடன், வெளியே செல்லும்போது குடையுடன் செல்வதால் அக்னி வெயிலின் தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment