பொங்கல் திருநாளையொட்டி தமிழக சீருடைப் பணியாளர்களுக்கு பதக்கம்! Tamil Nadu Uniformed Personnel Medal on Pongal Day! - Thulirkalvi

Latest

Saturday 14 January 2023

பொங்கல் திருநாளையொட்டி தமிழக சீருடைப் பணியாளர்களுக்கு பதக்கம்! Tamil Nadu Uniformed Personnel Medal on Pongal Day!

பொங்கல் திருநாளையொட்டி தமிழக சீருடைப் பணியாளர்களுக்கு பதக்கம்!

 பொங்கல் திருநாளையொட்டி 3,184 தமிழக காவல்துறை மற்றும் சீருடைப் பணியாளர்களுக்கு பதக்கம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன. 

 இந்த ஆண்டு, காவல் துறையில் (ஆண்/பெண்) காவலர் நிலை-2, காவலர் நிலை-1, தலைமைக் காவலர், ஹவில்தார் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3000 பணியாளர்களுக்கு "தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்” வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர் (சிறப்பு நிலைய அலுவலர்). 

யந்திர கம்மியர் ஒட்டி (சிறப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து)) மற்றும் தீயணைப்போர் (தரம் உயர்த்தப்பட்ட முன்னனி தீயணைப்போர்) ஆகிய நிலைகளில் 118 அலுவலர்களுக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் முதல் நிலை வார்டர்கள் (ஆண்) மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் (ஆண்/பெண்) நிலைகளில் 60 பேர்களுக்கும் "தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்" வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

 மேற்படி பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலைவேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400/-, 2023, பிப்ரவரி 1-ம் தேதி முதல் வழங்கப்படும். மேலும், காவல் வானொலி பிரிவு, மோப்ப நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 நபர்கள் என ஆக மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு “தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்” வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். 

இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும். இவர்கள் அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் முதலமைச்சரின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும்.

Tamil Nadu Uniformed Personnel Medal on Pongal Day!

  Chief Minister M. K. Stalin has ordered to give medals to 3,184 Tamil Nadu police and uniformed personnel on the occasion of Pongal. A press release issued by the Government of Tamil Nadu in this regard: Tamil Nadu Chief Minister's Medals are announced and awarded every year on the occasion of Pongal in order to recognize and encourage the personnel working in the police department, fire and rescue service department, prisons and correctional works departments in Tamil Nadu.

  This year, the Chief Minister of Tamil Nadu has ordered the award of "Tamil Chief Minister's Police Medals" to 3000 personnel in Police Department (Male/Female) in Constable Level-2, Constable Level-1, Head Constable, Havildar and Special Sub-Inspector ranks. (Special Station Officer).

118 Officers in the ranks of Yantra Commiear Otti (Special Station Officer (Traffic)) and Firemen (Upgraded Front Firemen) and 60 in the ranks of First Warders (Male) and Second Warders (Male/Female) in the Prisons and Reformatory Department under the “Chief Minister of Tamil Nadu” The Chief Minister has ordered to award "Special Service Medals".

  The recipients of the above medals will be paid a monthly medal of Rs.400/- with effect from February 1, 2023, irrespective of position. Also, the Chief Minister has ordered to award the “Tamil Chief Minister's Police Technology Special Service Medal” to a total of 6 officers and officers, namely 2 persons in each division, i.e. officers and officers working in Police Radio Unit, Sniffer Dog Unit and Police Photographers Unit.

Officers and officers receiving these medals will be given a cash sum commensurate with their positions. All of them will be presented with a medal and scroll signed by the Chief Minister at a special ceremony later.

No comments:

Post a Comment