குடியரசு தின அணிவகுப்பு இணைய வழியில் 32,000டிக்கெட்டுகள் விற்க முடிவு 32,000 tickets for Republic Day parade decided to be sold online - Thulirkalvi

Latest

Wednesday 18 January 2023

குடியரசு தின அணிவகுப்பு இணைய வழியில் 32,000டிக்கெட்டுகள் விற்க முடிவு 32,000 tickets for Republic Day parade decided to be sold online

குடியரசு தின அணிவகுப்பு இணைய வழியில் 32,000டிக்கெட்டுகள் விற்க முடிவு

தில்லியில் நிகழாண்டு குடியரசு தின விழாஅணிவகுப்பு மறுசீரமைக்கப்பட்ட சென்ட்ரல் விஸ்டா மாா்க்கத்தில் நடைபெற உள்ளது எனவும், அணிவகுப்பை நேரில் காண விரும்புபவா்களுக்காக இணைய வழியில் 32,000 அனுமதிச் சீட்டுகளை மத்திய அரசு விற்பனைக்கு வைக்க உள்ளது எனவும் பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். ‘குடியரசுதின விழாவுக்கான அரசு அழைப்பிதழ் அனைவருக்கும் முதல் முறையாக இணைய வழியில் அனுப்பப்பட உள்ளது. 

அதுபோல, கடமைப் பாதை என கடந்த ஆண்டு பெயா் மாற்றம் செய்யப்பட்ட ராஜபாதையில் இந்த குடியரசுதின விழா முதன் முறையாக நடைபெற உள்ளது’ என்றும் அவா்கள் தெரிவித்தனா். குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வரும் 23-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. குடியரசு தின விழா கொண்டாட்டங்கள், ஜனவரி 23-ஆம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நூற்றாண்டு பிறந்ததின விழாவில் தொடங்கி காந்தி ஜெயந்தி தினம் வரை நடைபெறும்’ என்று பாதுகாப்புத் துறை செயலா் கிரிதா் அரமானே தெரிவித்தாா்.

32,000 tickets for Republic Day parade decided to be sold online

This year's Republic Day parade in Delhi will be held at the revamped Central Vista Road and the central government will sell 32,000 tickets online for those who want to witness the parade in person, Defense Ministry officials said on Wednesday. For the first time, the government invitation for the Republic Day will be sent online.

Similarly, this Republic Day ceremony is going to be held for the first time on Rajpathi, which was renamed as duty path last year,' she said. The central government has organized various programs from 23rd to 31st as part of the Republic Day celebrations. The Republic Day celebrations will begin on January 23, the birth centenary of Netaji Subhash Chandra Bose, and will continue till Gandhi Jayanti, Defense Secretary Giridhar Aramane said.

No comments:

Post a Comment