8-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்ட தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.8th standard students can apply for National Income Stream and Skills Study Assistance Scheme Exam. - Thulirkalvi

Latest

Tuesday 27 December 2022

8-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்ட தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.8th standard students can apply for National Income Stream and Skills Study Assistance Scheme Exam.

8-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்ட தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமிநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- 2022 -2023-ம் கல்வி ஆண்டில் தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்ட தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

 இந்த தேர்வு வருகிற பிப்ரவரி 25-ந்தேதி நடைபெறுகிறது. இந்த திட்டத்தில் படிப்பு உதவித்தொகை வழங்க மாணவர்களை தேர்வு செய்ய வட்டார அளவில் தேர்வு மையங்கள் வைக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை நேற்று (26-ந்தேதி) முதல் வருகிற ஜனவரி 20-ந்தேதி வரை, http://dge 1.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணத் தொகை ரூ.50 செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை பள்ளி தலைமை ஆசிரியரிடம் கொடுக்க வேண்டிய கடைசி நாள் ஜனவரி 24-ந் தேதி ஆகும். இது தொடர்பான கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

8th standard students can apply for National Income Stream and Skills Study Assistance Scheme Exam.

Sivagangai District Principal Education Officer Saminathan said in a press release:- In the academic year 2022-2023, students studying in 8th standard in government and government-aided schools recognized by the government of Tamil Nadu can apply for the National Income Stream and Skill Study Assistance Program exam.

  This exam will be held on February 25. Examination centers have been set up at the district level to select the students for the scholarship in this scheme. Applications for this exam can be downloaded from yesterday (26th) to next January 20th at http://dge 1.tn.gov.in.

  The examination fee amount of Rs.50 should be paid along with the completed application form. The last date for submission of applications to the school headmaster is January 24. More details regarding this can be found on the website.

No comments:

Post a Comment