RTI தகவல் சார்ந்து கோப்புகள் காணவில்லை என்று பொதுத் தகவல் அலுவலரால் பதில் வழங்கப் பெற்றால், துறைரீதியான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு

0 Admin

இவ்வழக்கில் ஏற்கனவே 12.05.2025 அன்று ஆணையத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, கீழ்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

மனுதாரர் கோரிய கோப்புகள் (எண்கள் 9480 மற்றும் 362) ஆகியவற்றை பொதுத் தகவல் அலுவலர் / தலைமையிடத்து துணை வட்டாட்சியர், பூதலூர் வட்டம் அவர்கள், வட்டாட்சியர் அலுவலகத்தில் மீண்டும் ஒருமுறை முழுமையான வகையில் தேடிக்கண்டுபிடிக்குமாறும், அவ்வாறு அக்கோப்பு கிடைக்கும் பட்சத்தில், அதன் நகலை ஆணையத்திற்கு அடுத்த விசாரணையின்போது சமர்ப்பிக்க அவ்வாறு தேடியும் வேண்டுமென்று கண்டுபிடிக்க இயலவில்லையெனில், மேற்சொன்ன கோப்பு காணாமல் போனதற்கு காரணமான பொறுப்பாளி யார் என்பதை நிர்ணயம் செய்து, அன்னார் மீது

துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதோடு, அவர் மீது எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையினை அடுத்த விசாரணையின்போது ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வழக்கிற்கான அடுத்த விசாரணை 03.06 2025 தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அடுத்த விசாரணைக்கு மனுதாரர். பொதுத் தகவல் அலுவலர் /தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அலுவலகம் பூதலூர் விசாரணை வட்டாட்சியர் ஆணையத்திலிருந்து அனுப்பப்பட வேண்டும். அடுத்த விசாரணைக்கு அலுவலர் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும். ஆகியோர்களுக்கு அழைப்பாணைகள் பொதுத் தகவல்

2 அதன் பின்னர் வழக்கானது ஒத்தி வைக்கப்பட்டு 03.06.2025 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு கீழ் கண்டவாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

பொதுத் தகவல் அலுவலர் மனுதாரர் கோரிய கோப்பு எண்கள் 9480 மற்றும் 362 ஆகியவற்றை தங்கள் அலுவலகத்தில் முழுமையாகத் தேடிப்பார்த்தும் கிடைக்கப்பெறவில்லையென்றும், ஆதலால் மனுதாரர் கோரிய நகல்களை அவருக்கு வழங்க இயலவில்லையென்றும் விசாரணையின்போது தெரிவித்தார்

மேற்படி கோப்புகள் காணாமல் போனது தொடர்பாக தங்கள் அலுவலக ஊழியர்களுக்கு விளக்கம் கோரும் குறிப்பாணைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அக்குறிப்பாணையின் நகலினை விசாரணையின்போது ஆணையத்தின் முன் பொதுத் தகவல் அலுவலர் சமர்ப்பித்தார். மேலும் ஒரு மாத கால அவகாசம் தனக்கு அளிக்கும்பட்சத்தில் மேற்குறிப்பிடப்பட்ட ஊழியர்களிடமிருந்து பெறப்படும் குறிப்பாணைகளுக்கான விளக்கங்களின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையினை சமர்ப்பிப்பதாக பொதுத் தகவல் அலுவலர் ஆணையத்தின் முன் கோரினார். அவரது கோரிக்கையினை ஆணையம் ஏற்கிறது.

எனவே, பொதுத் தகவல் அலுவலர் ஒரு மாத காலத்திற்குள் மேற்குறிப்பிட்டவாறு கோப்புகள் காணாமல் போனதற்கு பொறுப்பான அலுவலர் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தினை 17.072025 பிற்பகல் அன்று ஆணையத்தில் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்குமாறு ஆணையத்தால் உத்தரவிடப்படுகிறது.

3. மேற்குறிப்பிட்டதற்கிணங்க திருமதி சாந்தி, பொதுத் தகவல் அலுவலர் / தலைமையிடத்து துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், பூதலூர் இன்று (17.07.2025) நேரில் ஆஜராகி கோப்பு காணாமல் போனதற்கு கோப்பு தொடர்புடைய இருக்கையாளர்கள் மீது விளக்கம் கோரப்பட்டு அவர்களிடமிருந்து பெறப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர், தஞ்சாவூர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர், தஞ்சாவூர் ஆகியோர்களுக்கு 11.07.2025 தேதியிட்ட கடிதங்கள் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்து அது தொடர்பான நகல்களை ஆணையத்தின் முன் சமர்பித்தார்.

4. எனவே மாவட்ட ஆட்சியர், தஞ்சாவூர் அவர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர், தஞ்சாவூர் அவர்கள் மேற்குறிப்பிட்ட கோப்பு காணமல் போனது தொடர்பான இருக்கையாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரத்தினை மூன்று மாத காலத்திற்குள் ஆணையத்திற்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்படுகிறது.

ஒம்/முகம்மது ஷகீல் அஃதர்) மாநில தலைமை தகவல் ஆணையர்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.