பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -13/08/2025

0 Admin
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -13.08.2025 
பிடல் காஸ்ட்ரோ 

திருக்குறள்: குறள் 351: பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு 

விளக்க உரை: மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும். பழமொழி : Keep going, even when it's hard. கடினமாக இருந்தாலும்,தொடர்ந்தால் வெற்றி உனதே. 

இரண்டொழுக்க பண்புகள் : 1.உண்மை பேசுவதே உயர்ந்த பண்பு. 2.எனவே எப்போதும் உண்மையை மட்டுமே பேசுவேன். 

பொன்மொழி : வாழு! வாழ விடு! ஏனெனில் வாழ்க்கையின் நியதி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் சகிப்புத்தன்மையுமே ஆகும் - மகாத்மா காந்தி. 

பொது அறிவு : 01.தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர் யார்? நாமக்கல் கவிஞர். வெ.இராமலிங்கம் பிள்ளை (Nammakal V. Ramalingam pillai) 02. அதிக நாடுகளைக் கொண்ட கண்டம் எது? ஆப்பிரிக்கா-54 நாடுகள் (Africa 54- Countries) 

English words : gangway - a bridge that people use for getting on or off a ship.கப்பலில் ஏற அல்லது இறங்கப் பயன்படுத்தப்படும் பாலம் போன்ற அமைப்பு Grammar Tips: Preposition continuation Today, we will see where to use On/In On- before day, mode of transport, position Ex –On Monday On a bicycle, On the ground In – week/ month/ year Season State of condition Ex: In 2024 In January In summer In good health 

அறிவியல் களஞ்சியம் : மனித உடலில் 60 சதவிதம் நீர் தான் உள்ளது. இது சுமார் 50 லிட்டர் இருக்கும். அதாவது நூறு கிலோ மனிதனின் உடலில் 60 லிட்டர் தண்ணீர் தான் இருக்கிறது. 

ஆகஸ்ட் 13 பிடல் காஸ்ட்ரோ அவர்களின் பிறந்தநாள் பிடல் காஸ்ட்ரோ (Fidel Alejandro Castro Ruz, (எசுப்பானியம்: [fiˈðel ˈkastro], ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016) கியூபாவை சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.கூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. பன்னாட்டளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார். பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள் பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள் (International Lefthanders Day) என்பது இடது கை பழக்கம் உள்ளவர்களின் தனித்துவம் மற்றும் வேறுபாடுகளைக் கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13 அன்று அனுசரிக்கப்படும் பன்னாட்டு தினமாகும். 1976 முதல் "பன்னாட்டு இடக்கை பழக்கத்தவரின் நிறுவனத்தின்" நிறுவனர் ஆர். கேம்ப்பெல் என்பவரால் கொண்டாடப்பட்டது. 

நீதிக்கதை கழுகின் நன்றியுணர்ச்சியும், நரியும் ஒரு நாள் வேடன் ஒருவன் வேட்டையாட சென்றிருந்தான். அவன் விரித்திருந்த வலையில் கழுகு ஒன்று சிக்கிக்கொண்டது. அந்த கழுகின் சிறகுகளை மட்டும் வெட்டி சங்கிலியால் கட்டிப் போட்டான். அவ்வழியே சென்ற ஒருவர், கழுகின் மீது இரக்கப்பட்டு வேடனிடம் காசு கொடுத்து அந்தக் கழுகை வாங்கி, தன் வீட்டில் அன்புடன் வளர்த்தார். இறக்கைகள் நன்கு வளர்ந்தது, பின் அதைப் பறக்க செய்தார். கழுகு பறந்து செல்லும் போது ஒரு முயலைப் பார்த்தது. அதை தூக்கி வந்து தன்னை வளர்த்தவரிடம் காணிக்கையாகக் கொடுத்தது. இதைப் பார்த்த நரி, உன்னைப் பிடித்த வேடன் மறுபடியும் பிடிக்க வரலாம், நீ இந்த முயலை அவனிடம் கொடுத்திருந்தால், மறுபடியும் அவன் உன்னைப் பிடிக்காமல் இருப்பான். எதற்காக அவரிடம் கொடுத்தாய் என கழுகிடம் கேட்டது. இல்லை நீ சொல்வது தவறு. வேடனிடம் நான் முயலைக் கொடுத்தாலும், பிற்காலத்தில் அவன் என்னை பிடிக்காமல் இருக்கபோவதில்லை, ஆனால் நான் ஆபத்தில் இருந்தபோது என்னைப் காப்பாற்றியவருக்கு என் நன்றியையும், விசுவாசத்தையும் தெரிவிக்கவே முயலைக் காணிக்கையாகச் கொடுத்தேன் எனப் பதில் கூறியது கழுகு. 

நீதி : உதவி செய்தவரிடம் நன்றியோடு இருப்பது தான் பண்புள்ள செயல். 

இன்றைய செய்திகள் 13.08.2025 

 ⭐வருகிற 7-ந்தேதி முழு சந்திர கிரகணம்: சென்னையில் முழுமையாக தெரியும் 

 ⭐சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் எண்ணிக்கை 780 ஆக உயர்வு-அதிகாரி தகவல் 

 ⭐கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி: விலைப்பட்டியலை சமர்ப்பித்த டெல், ஏசர் 

 🏀 விளையாட்டுச் செய்திகள் 

🏀இரண்டு ஜப்பானிய குத்துச்சண்டை வீரர்கள் -ஷிகெடோஷி கோட்டாரி மற்றும் ஹிரோமாசா உரகாவா -பரிதாபமாக இறந்தனர். 

 🏀41 பந்தில் சதம் விளாசிய டெவால்ட் ப்ரீவிஸ்: பொன்னான வாய்ப்பை தவற விட்ட ஐபிஎல் அணிகள்- டி வில்லியர்ஸ் 

Today's Headlines 

Total lunar eclipse fully visible in Chennai on the 7th September. 

⭐Official information about Elephants in the Sathyamangalam Tiger Reserve areas has increased to 780 

Dell and Acer have submitted the quotation for laptops, which will be provided to college students. 

SPORTS NEWS 

🏀Two Japanese boxers - Shigetoshi Kotari and Hiromasa Uragawa - died tragically. 

 🏀Dewald Brevis hits 41-ball century in IPL teams that missed a golden opportunity - de Villiers 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.