பொன்மொழி :
    
    
      எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறு ஆனவர்கள் யாரும்
            தனக்காக வாழ்ந்ததில்லை . - காமராஜர்
    
    
      பொது அறிவு : 
    
    
      01.இந்தியாவின் தங்க நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?
    
    
      ஜெய்சல்மார் - ராஜஸ்தான்
    
    
          Jaisalmar - Rajasthan
        
        
02. பூகம்ப அதிர்வை அளக்க பயன்படும் கருவி எது?
    
      சீஸ்மோகிராப்
    
    
        Seismograph
      
    
    
    
    
    
    
    
    
      English words :
    
    
      Parchment – a material made from the skin of animals for writing
            purposes in the past.
    
    
      Grammar Tips: 
    
    
      The catch rule
    
    
      
    
    
      After short vowels, use 'tch'
    
    
      Ex. Catch
    
    
      
    
    
      After consonants and long vowels, use ch
    
    
      Ex. Peach, bench 
    
    
      
    
    
      அறிவியல் களஞ்சியம் :
    
    
       ஒவ்வொரு மனிதருக்கும் தனிப்பட்ட நறுமணம் இருப்பதால், வாசனை
            சோப்புகளால் ஏற்படும் பாதிப்புகள் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது.
            மனிதர்கள் தேர்ந்தெடுக்கும் சோப்புகளின் வாசனையும் அவர்களில் சிலரை
            மட்டும் கொசு கடிக்க ஒரு காரணமாக அமையலாம் என்று ஐசயன்ஸ் (iScience)
            என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது
    
    
      ஜூலை 21
    
    
      
        21 July 2007 – Pratibha Patil became the first woman President of
              India.
      
      
        
      
      
        21 ஜூலை 2007 - திருமதி பிரதீபா பாட்டீல் அவர்கள் இந்தியாவின் முதல்
              பெண் குடியரசுத்தலைவர் ஆனார்.
      
     
    
      நீதிக்கதை
    
    
       அறிவு உயிரைக் காப்பாற்றும்
    
    
      
    
    
      வீமபுரி என்ற நாட்டை வீரகேசரி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன்
          நீதியும், நேர்மையும் தவறாமல் ஆட்சி செய்து வந்ததால் அவன் நாட்டு மக்கள்
          பயமும் கவலையும் இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்.
    
    
      அந்த அரசன் தன்னாட்டு மக்களின் செயல்களை கண்காணிக்க மாறுவேடம் அணிந்து
          செல்வது வழக்கம். அவ்வாறு அவன் மாறுவேடம் அணிந்து செல்லும்போது வழியில்
          உழவன் ஒருவன் வயலில் உழுது கொண்டிருப்பதை பார்த்தான். அவனைக் கண்ட மாறு
          வேடத்தில் இருந்த அரசன், “எல்லாம் வல்ல இறைவன் உனக்கு நல்ல வலிமையையும்,
          நீண்ட வாழ்நாளையும் வழங்குவானாக” என்று வாழ்த்தினான். 
    
    
      அதற்கு அந்த உழவன் மாறுவேடத்தில் இருந்த அரசனைப் பார்த்து, “தாங்கள்
          என்மீது காட்டும் அன்பிர்க்கு மிக்க நன்றி” என்றான். “நிலத்தில் எவ்வளவு
          வருமானம் கிடைக்கிறது?” என்று மாறுவேடத்தில் இருந்த அரசன் அந்த உழவனிடம்
          கேட்டான். 
    
    
      
        அதற்கு உழவன், “மாதத்திற்கு நூறு வெள்ளி காசுகள் கிடைக்கின்றன” என்று
            பதில் அளித்தான். “அவ்வளவு தொகையை என்ன செய்கிறாய்?” என்று அரசன்
            கேட்டான். 
      
      
        
      
      
        “ஐந்தில் ஒரு பங்கை அரசனுக்கு வரியாக செலுத்துகிறேன். இன்னொரு பங்கை
            நான் பட்ட கடனுக்கு அடைக்கிறேன். மற்றொரு பங்கை கடனாகத் தருகிறேன்.
            நான்காவது பங்கை வீசி எறிகிறேன். இறுதிப் பங்கை எனக்காக செலவு
            செய்கிறேன்” என்று புதிராகப் பேசினான்.
      
      
        
      
      
        இதை கேட்ட மாறுவேடத்தில் இருந்த அரசனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தன்
            மாறுவேடத்தை   கலைத்தான். இதுவரை தன்னிடம் பேசியவர் அரசர்
            தான் என்பதை அறிந்த உழவன் அவரை பணிவுடன் வணங்கினான்.
      
      
        
      
      
        “நீ சொன்ன பதிலில் வரியாகத் தருவதும், உனக்காக செலவு செய்வதும்தான்,
            எனக்கு புரிந்தது. மற்றவற்றின் அர்த்தம் என்ன?” என்று கேட்டான்
            அரசன். 
      
      
        
      
      
        அதற்கு உழவன் அரசே, “என் வருமானத்தில் ஒரு பங்கை என் தாய்
            தந்தையருக்கு செலவு செய்கிறேன். என்னை வளர்த்து ஆளாக்கிய அவர்களுக்கு
            செலவு செய்வதை கடனுக்கு அடைக்கிறேன் என்றேன்.
      
      
        
      
      
        இன்னொரு பங்கை என் மகனுக்கு செலவு செய்கிறேன். பிற்காலத்தில் என்னை
            காப்பாற்றப் போகிறவன் அவன். அதனால், அதை கடனாகத் தருகிறேன்
            என்றேன். 
      
      
        
      
     
    
      
        நான்காவது பங்கை என் மகளுக்கு செலவு செய்கிறேன். எப்படி இருந்தாலும்
            திருமணம் ஆகி இன்னொருவன் வீட்டில் வாழ வேண்டியவள். அதனால் அந்த செலவை
            வீணாகத் தெருவில் எறிகிறேன் என்றேன். 
      
      
        
      
      
        அந்த  உழவனின் பதிலை கேட்டு மகிழ்ந்த அரசன். உன் அறிவுக் கூர்மை
            மிகவும் நன்றாக உள்ளது. “இந்த விளக்கத்தை நான் இல்லாமல் நீ யாரிடமும்
            கூறக்கூடாது. அப்படி கூறினால் உன் உடலில் உயிர் இருக்காது” என்று
            சொல்லிவிட்டு சென்றான். 
      
      
        
      
      
        அரசவைக்கு வந்த அரசன், தான் கேட்ட புதிரை அனைவரிடமும் சொல்லி அதற்கு
            விளக்கம் கேட்டான். ஒருவராலும் அதற்கு விளக்கம் கூற முடியவில்லை. இந்த
            புதிருக்கு யார் விளக்கம் கூறினாலும் அவருக்கு ஆயிரம் பொற்காசுகள்
            பரிசாக வழங்கப்படும், என்று அறிவித்தான் அரசன். 
      
      
        
      
      
        அரசனுக்கு இந்த புதிரைக் கூறியவர் யார் என்பதை அறிந்து கொண்டான்
            அமைச்சர்களுள் ஒருவன். அந்த அமைச்சர் நேராக இந்த உழவனிடம்
            சென்றார்.. 
      
      
        “அரசு நாணய சாலையில் புத்தம் புதிதாக அச்சடித்த இந்த ஐநூறு
            பொற்காசுகளை பெற்றுக்கொண்டு அரசரிடம் சொன்ன புதிருக்கான விளக்கத்தை
            என்னிடம் கூறு” என்றான் அமைச்சர். 
      
      
        
      
      
        கண்ணை பறிக்கும் ஒளியுடன் கூடிய பொற்காசுகளை கண்ட உழவன் அரசரை
            எப்படியும் சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணி அந்த புதிருக்கான
            விளக்கத்தை கூறி பொற்காசுகளைப் பெற்றுக் கொண்டான்.
      
      
        
      
     
    
      
        அரண்மனைக்குத் திரும்பிய அமைச்சர் நேரடியாக அரசிடம் சென்று
            புதிருக்கான விளக்கத்தை கூறினான். உழவன் தான் பதில் கூறி இருக்கிறான்
            என்பதை அரசன் அறிந்து கொண்டு, அவனை இழுத்து வருமாறு தன்னுடைய
            காவலர்களுக்கு ஆணையிட்டான்.
      
      
        
      
      
        அரசவைக்கு இழுத்து வரப்பட்ட உழவனை பார்த்து, “உனக்கு என்ன துணிச்சல்?
            நான் இல்லாமல் யாரிடமும் அந்த புதிருக்கான விளக்கத்தை சொல்லக்கூடாது.
            சொன்னால் உன் உயிர் போய்விடும் என்று உனக்கு நான்
            கட்டளையிட்டிருந்தேன். என் கட்டளையை மீறி சொல்லி இருக்கிறாய், உன்
            உயிரை இப்பொழுது யார் காப்பாற்றப் போகிறார் என்று பார்ப்போம்” என்று
            கோபத்துடன் கேட்டான் அரசன். 
      
      
        
      
      
        அதற்கு அந்த உழவன் அரசனைப் பார்த்து, “அரசே, நான் சொல்வதைக்
            கேளுங்கள். என் மீது எந்த தவறும் இல்லை என்று பணிவாக கூறினான்,”
            உழவன். 
      
      
        
      
      
        அதற்கு அரசன், “நான் இல்லாமல் யாரிடமும் இந்த புதிருக்கான பதில்
            சொல்லக்கூடாது என்றேன் அல்லவா?” என்று கத்தினான். 
      
      
        
      
      
        உடனே அமைச்சர் எடுத்து கொடுத்த பொற்காசுகளை அரசனிடம் காட்டிய உழவன்,
            “இந்த பொற்காசுகளில் ஒரு பக்கத்தில் தங்கள் உருவம்
            பொறிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து தான் அமைச்சரிடம் பதில்
            கூறினேன். 
      
     
    
      
    
    
      
        எனவே தங்களை வைத்துக் கொண்டுதான் நான் விளக்கம் கூறினேன். தங்கள்
            கட்டளையை நான் எந்த வகையிலும் மீறவில்லை” என்று கூறினான். 
      
      
        
      
      
        உழவனின் அறிவுக் கூர்மையை  அறிந்த அரசன் அவனுக்கு பரிசுகள் பல
            தந்து அனுப்பி வைத்தான். உழவனின் உயிரைத் தக்க சமயத்தில் காப்பாற்றியது
            அவருடைய அறிவுக் கூர்மையே ஆகும்.
      
     
    
      
    
    
      
        இன்றைய செய்திகள்
      
      
        
          21.07.2025
        
        
          
        
        
          
              
                
                    
                      ⭐இந்த ஆண்டில் 3-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை:
                    
                    கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
                    
                    
                      ⭐ இந்தியாவில், 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 77 கோடி பேர்
                      டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2.5 கோடி
                      பேர் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் அதாவது நீரிழிவு நோயால்
                      பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.
                    
                    
                    
                      ⭐இந்தியா சீனா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து
                      செயல்படும் RIC அமைப்பை (Russia-India-China Mechanism)
                      உருவாக்க ரஷ்யா முயற்சி எடுத்து உள்ளது.
                    
                    
                    
                    🏀 விளையாட்டுச் செய்திகள்
                    
                    
                      🏀உலக கோப்பை மகளிர் செஸ் காலிறுதி ஆட்டத்தில் இந்திய
                      வீராங்கனை ஹம்பி வெற்றி
                    
                    
                    
                      🏀Freestyle செஸ் தொடர்: உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை
                      மீண்டும் வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி
                    
                    
                   
                  
                
         
        
          Today's Headlines
        
        
          
        
        
          
              
                
                  
                    
                      
                        
                          
                            
                              
                                  ⭐Warning to coastal residents near Mettur dam
                                  regarding the dam being filled for the 3rd
                                  time this year.
                                
                                
                                
                                  ⭐ In India, about 770 million people over the
                                  age of 18 are suffering from type 2 diabetes.
                                  25 million people are at risk of developing
                                  pre-diabetes.
                                
                                
                                
                                  ⭐Russia is trying to create an RIC
                                  (Russia-India-China Mechanism) system that
                                  will bring together India, China, and Russia.
                                
                                
                                 SPORTS NEWS 
                                
                                
                                  🏀Indian player Humpy won in the World Cup
                                  Women's Chess quarterfinal 
                                
                                
                                
                                  🏀 Freestyle Chess Series: Praggnanandhaa won
                                  again, defeating world No. 1 Carlsen.