அரசு கவின் கலைக் கல்லூரி, கும்பகோணம் 2025-2026 ஆம் கல்வியாண்டு -இளங்கலைப் பட்டப்படிப்பு மாணாக்கர் சேர்க்கை அறிவிப்பு - Thulirkalvi

Latest

Tuesday, 29 July 2025

அரசு கவின் கலைக் கல்லூரி, கும்பகோணம் 2025-2026 ஆம் கல்வியாண்டு -இளங்கலைப் பட்டப்படிப்பு மாணாக்கர் சேர்க்கை அறிவிப்பு

அரசு கவின் கலைக் கல்லூரி, கும்பகோணம் - 2025-2026 ஆம் கல்வியாண்டு -இளங்கலைப் பட்டப்படிப்பு - ஒருங்கிணைந்த வடிவமைப்பு (Integrated Design) மற்றும் இயங்குபட வடிவமைப்பு மற்றும் காட்சிவழி தொடர்பு (Animation and Visual effects) ஆகிய இரண்டு பிரிவுகளில் மாணாக்கர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

மாண்புமிகு அமைச்சர் அவர்களின் 2025-2026ஆம் ஆண்டிற்கான அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு, கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் கும்பகோணம், அரசு கவின் கலைக் கல்லூரியில் வண்ணக்கலை (Painting), சிற்பக்கலை (Sculpture) மற்றும் காட்சிவழித் தகவல் தொடர்பு வடிவமைப்பு (Visual Communication Design) ஆகிய பிரிவுகளில் நான்காண்டு இளங்கவின்கலை பட்டப்படிப்புகளும் மற்றும் இரண்டாண்டு முதுகவின்கலைப் பட்டப்படிப்புகளும் பயிற்றுவிக்கப்பட்டு வரும் நிலையில், மாணாக்கர்களின் கல்வி நலன் கருதி. தற்போது இக்கல்லூரியில் மாணர்களிடையே பெரிதும் வரவேற்பு பெற்றுள்ள ஒருங்கிணைந்த வடிவமைப்பு (Integrated Design) மற்றும் இயங்குபட வடிவமைப்பு மற்றும் காட்சிவழி தொடர்பு (Animation and Visual effects) ஆகிய இரண்டு பிரிவுகளில் புதிதாக நான்காண்டு இளங்கலை பட்டப்படிப்புகள் 2025-2026ஆம் கல்வி ஆண்டு முதல் துவங்கப்படவுள்ளன. மேற்காண் பட்டப்படிப்புகளுக்கு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்காண் பாடப் பிரிவுகளில் பயில விருப்பம் உள்ள மாணாக்கர்கள் 09.08.2025 அன்று மாலை 06.00 மணிக்குள் கலை பண்பாட்டுத்துறையின் www.artandculture.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

இயக்குநர் கலை பண்பாட்டுத்துறை

No comments:

Post a Comment