விவசாயிகளுக்கான ஏற்றுமதி நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் குறித்த மூன்று நாள் இலவச பயிற்சி

0 rajkalviplus

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கான ஏற்றுமதி நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் குறித்த மூன்று நாள் இலவச பயிற்சி

விவசாயிகளுக்கான ஏற்றுமதி நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் குறித்த மூன்று நாள் இலவச பயிற்சி

இந்தியாவில் தற்போது உற்பத்தி பொருட்கள் / சேவைகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலமாக தொழில்கள் விரிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து கொண்டே உள்ளன. எனவே ஏற்றுமதி பற்றியும் அதன் வழிமுறைகளை பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசின் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில், விவசாயிகள் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள். உணவு சார் தொழில்முனைவோர்ளுக்கான "வேளாண் ஏற்றுமதிக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி " இப்பயிற்சியில் ஏற்றுமதி நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் குறித்த மூன்று நாள் இலவச பயிற்சி வரும் 09.07.2025 முதல் 11.07.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை, வேளாண் ஏற்றுமதி சுற்றுச்சூழல் அமைப்பு, ஒழுங்குமுறை கட்டமைப்புகள் மற்றும் கட்டாய பதிவு, ஏற்றுமதிக்கான படிப்படியான வழிகாட்டுத்தல் மற்றும் ஆவணப்படுத்தல், தயாரிப்பு தரம் மற்றும் சோதனைத் தேவைகள், ஏற்றுமதிக்கான பேக்கேஜிங் & பிராண்டிங், சுங்க நடைமுறைகள் மற்றும் தளவாடங்கள் மற்றும் சரிவின்றி குளிர்ச்சியில் பொருட்களை கொண்டு செல்லும் முறைகளின் மேலாண்மை, சந்தை ஆராய்ச்சி மற்றும் வாங்குபவர் அடையாளம் காணல், செலவு நிர்ணயம், விலை நிர்ணயம் மற்றும் ஏற்றுமதி நிதி. ஏற்றுமதி வணிக திட்டமிடல் மற்றும் அரசு திட்டங்கள், விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதியாளர்களிடமிருந்து அனுபவப் பகிர்வு போன்றவை பயிற்றுவிக்கப்படும். மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும். இப்பயிற்சியில் ஆர்வமுள்ள விவசாயிகள் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் (FPOs), உணவு வணிக நிறுவனங்கள் (FBOs) மற்றும் தொழில்முனைவோர். ஏற்றுமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 முதல் 65 வயது நிரம்பிய 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் கைபேசி எண்கள். 8668102600

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 032.

முன்பதிவு அவசியம்:

அரசு சான்றிதழ் வழங்கப்படும்

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.