பள்ளிக் கல்வி- 2025-26ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - நடத்துதல் - விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (EMIS) இணையத்தில் பதிவேற்றம் செய்தமை - கலந்தாய்வு காலஅட்டவணை அனுப்புதல் - சார்பு.
பார்வை:- தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 15.6.6.037584/43/81/2025 -0-.18.06.2025
பார்வையில் காணும் இயக்குநரின் செயல்முறைகளில் 2025-26 கல்வியாண்டிற்கான அனைத்துவகை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்துவது சார்பாக அறிவுரைகள் மற்றும் மாறுதல் விண்ணப்பங்களை EMIS இணையதளத்தில் விண்ணப்பிக்க 19.6.2025 முதல் 25.06.2025 பிற்பகல் 06.00 மணி வரை பதிவேற்றம் மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக பொதுமாறுதல் கலந்தாய்விற்கான பதவி வாரியான காலஅட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பபப்டுகிறது.
பொதுவான அறிவுரைகள்
30.06.2025 அன்றைய நிலவரப்படி அனைத்துவகையான ஆசிரியர்களின் நிரப்பத்தகுந்த காலிப்பணியிட விவரங்களை (Eligible Vacancy Only) CEO Login ID ஐ பயன்படுத்தி EMIS இணையதளத்தில் அதற்கென உள்ள உரிய படிவத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும். ஆசிரியரின்றி உபரிக் காலிப் பணியிடத்தினை (Surplus Post without Person) எக்காரணம் கொண்டும் காலிப்பணியிடமாக (பதிவேற்றம் செய்திடக்கூடாது) கருதகூடாது.
மேலும் காலிப்பணியிட விவரங்கள் EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்து முடிக்கப்பட்டவுடன் பின்னர் சேர்க்கை / நீக்கம் /திருத்தங்கள் போன்றவைகளுக்கு இடமளிக்காமல் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
கணவன்-மனைவி பணிபுரிபவர்கள் முன்னுரிமை அடிப்படையில் (Spouse Priority) மாறுதலுக்கு விண்ணப்பிப்பவர்கள் (30கிமீ தொலைவில்) கணவன் பணிபுரியும் மாவட்டம் (அ) மனைவி பணிபுரியும் மாவட்டத்தை மட்டுமே தெரிவு செய்ய அனுமதிக்கப்படவேண்டும். வேறு மாவட்டங்களை தெரிவு செய்திட அனுமதிக்க இயலாது. உள்மாவட்டத்திற்கு மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் தங்களுக்குரிய சுழற்சி (turn) வரும்போது அம்மாவட்டத்தில் தங்களுக்கு மாறுதல் பெற்றுக்கொள்ள விருப்பமுள்ள காலிப்பணியிடம் ஏதும் இல்லையெனில் Not Willing என தெரிவு செய்து கொள்ளலாம். பின்னர் உள்மாவட்டத்திற்கான கலந்தாய்வு முழுமையாக முடிவு பெற்ற பிறகு இறுதியாக மீதம் உள்ள (Resultant Vacancy) காலிப்பணியிடங்களில் மேற்காணுமாறு Not Willing தெரிவு செய்தவர்களுக்கு மீண்டும் ஒரு முறை உள்மாவட்டத்திற்குள் மாறுதல் பெற வாய்ப்பு அளிக்கும் வகையில் அவரவர்களின் முன்னுரிமைப்படி மீண்டும் ஒரு முறை (One More choice) காலிப்பணியிடங்களை விருப்பத் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவர்.
மாவட்டம் விட்டு மாவட்டம் (Inter district transfer) கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் கலந்தாய்வின் போது தற்போது பணிபுரியும் மாவட்டத்தினை தவிர்த்து பிற மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடத்தினையே தெரிவு செய்யப்படவேண்டும். (தனியரின் தற்போது பணிபுரியும் மாவட்டம் EMIS இணையத்தில் காண்பிக்கப்படமாட்டாது)
மேலும் மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் உள்மாவட்டம் / மாவட்டம் விட்டு மாவட்டம் ஆகிய இரு கலந்தாய்விற்கும் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்கள் உள்மாவட்டத்திற்குள் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் ஆணை பெற்றவர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது.
மாவட்டத்திற்குள் / மாவட்டம் விட்டு மாவட்டம் சேர்த்து 50,000 க்கும் அதிகமான ஆசிரியர்கள் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் பொது மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ளனர். கலந்தாய்வு நடைபெறும் நாளில் மாற்றுப்பணி அனுமதிக்க இயலாது எனவும், தற்செயல் விடுப்பு அளித்துவிட்டு கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கலாகிறது.
மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து கலந்தாய்வு நடைபெறும் அன்றைய நாளில் வருகைபுரியாமலோ (Absent &Late) தாமதமாக வருகைபுரிந்தாலோ கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது.
மேலும் இணைப்பில் காணும் காலஅட்டவணையில் தெரிவித்துள்ளவாறு மாறுதல் கோரி விண்ணப்பிக்கப்பட்ட ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் உரிய தேதியில் வெளியிடப்படும். அப்பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் ஏதும் இருப்பின் அதனை EMIS Online வழியே உரிய விவரங்களை தெரிவித்திடவும், இதனை முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் அலுவலகத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட EMIS Login IDஐ பயன்படுத்தி மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களின் அனைத்து விவரங்களும் சரியாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திடவும் உரிய முறையீடுகள், திருத்தங்கள் இருப்பின் அதனை சரிசெய்திடவும் அறிவுறுத்தப்படுகிறது. மேற்படி திருத்தங்கள் முறையீடுகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு இறுதி முன்னுரிமைப் பட்டியல் (Final Seniority List) வெளியிடப்பட்ட பிறகு திருத்தங்கள் / முறையீடுகள் ஏதும் இருப்பின் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
பார்வை-1ல் காணும் அரசாணைக்கு திருத்தம் வெளியிடப்பட்ட அரசாணை (ιστιου) στο 164 பள்ளிக் கல்வி (क5(1) துறை நாள்.11.7.2024ன்படி கடந்த ஓராண்டிற்குள் ஆசிரியரின் கணவரோ (அ) மனைவியோ விபத்து மற்றும் இதர காரணங்களால் திடீரென மரணம் அடைந்து இருப்பின் எந்தவித முன்னுரிமையும் பின்பற்றாமல் கலந்தாய்வுக்கு முன்னரே அவர்கள் கோரும் காலிப்பணியிடத்திற்கு மாறுதல் வழங்கப்படவேண்டும்.
புகாருக்கு உள்ளாகி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு நிர்வாக மாறுதல் செய்யப்பட்டவர்கள் மீண்டும் அதே பள்ளியை கலந்தாய்வில் தெரிவு செய்திட அனுமதித்தல் கூடாது. மேலும் போக்சோ வழக்குகளில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வேறு மாவட்டத்திற்கு நிர்வாக மாறுதல் செய்யப்பட்டவர்கள் மீண்டும் ஏற்கனவே பணிபுரிந்த அதே மாவட்டத்தினை தெரிவு செய்ய அனுமதித்தல் கூடாது. இதனை முதன்மைக் கல்வி அலுவலர்கள் கண்காணித்து செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கலந்தாய்வு:- அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு பதவி வாரியாக கால அட்டவணையில் குறிப்பிட்டவாறு முதன்மைக் கல்வி அலுவலர்களின் EMIS Login மூலமாகவே நடத்தப்படும்.
கலந்தாய்விற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் (கணினி, மின்இணைப்பு, இணையதளம். இருக்கை வசதி போன்ற இதர வசதிகளை) மேற்கொள்ளப்படவேண்டும். கலந்தாய்வுகள் நடைபெறும் அன்றைய நாளில் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் கலந்தாய்வினை சிறப்பாக நல்லமுறையில் நடத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேற்காண் விவரங்களை தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கையின் வாயிலாக தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.