TNPSC நடத்தும் தேர்வுகளின் OMR விடைத்தாளில் புதிய மாற்றம்! - Thulirkalvi

Latest

Saturday, 26 April 2025

TNPSC நடத்தும் தேர்வுகளின் OMR விடைத்தாளில் புதிய மாற்றம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், OMR விடைத்தாளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரிப் படிவமானது OMR Answer Sheet Sample" எனும் தலைப்பில் தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

தேர்வர்கள் 4 இலக்க வினாத்தொகுப்பு எண்ணை அதற்குரிய வட்டங்களில் கருமை நிற பந்துமுனை பேனாவைப் பயன்படுத்தி கருமையாக்க வேண்டுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், OMR விடைத்தாளின் பக்கம்-1, பகுதி-II-இல், தேர்வர்கள் உறுதிமொழி அளித்து, கையொப்பமிட வேண்டும். மேலும், தேர்வாணையத்தால் நடத்தப்படவிருக்கும் இனிவரும் அனைத்து OMR முறை தேர்வுகளிலும் பங்கேற்க உள்ள தேர்வர்கள், புதிய மாதிரி OMR விடைத்தாளினை நன்கு பார்த்து அறிந்து கொண்டு தேர்வு எழுதுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment