அரசு ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் சம்பளக் கணக்குகளைப் பராமரிப்பதற்காக வங்கிகள் வழங்கும் பல்வேறு சலுகைகள் குறித்து சில விவரங்கள்

மாநில வரவு செலவு 2025-26பேரூராட்சிகள் ஆணையரகம் அரசு ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் சம்பளக் கணக்குகளைப் பராமரிப்பதற்காக வங்கிகள் வழங்கும் பல்வேறு சலுகைகள் குறித்து சில விவரங்கள் கோரியது தொடர்பாக!

அரசு ஊழியர்களின் சம்பளக் கணக்குகளைப் பராமரிக்கும் பல வங்கிகளில் டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் பலன்கள், தனிநபர் விபத்துக் காப்பீடு, கடனுக்கான வட்டியில் சிறப்பு தள்ளுபடிகள் போன்ற பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டப் பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்த மாண்புமிகு நிதியமைச்சர். "மக்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்த அயராது உழைக்கும் அரசு ஊழியர்களின் நலனுக்காக அரசு உறுதி செய்துள்ளது. அரசின் முயற்சியின் பலனாக, தமிழக அரசு ஊழியர்களின் சம்பளக் கணக்கை பராமரிக்கும் முக்கிய வங்கிகள், அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க முன் வந்துள்ளன எனவும், வங்கிகளில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து கீழ்காணும் விவரப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து மரணம், அல்லது விபத்தால் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் அரசு ஊழியர்களுக்கு ரூ.1 கோடி வரை தனிநபர் விபத்து காப்பீடு வழங்கப்படும்.

விபத்தால் இறந்த அரசு ஊழியரின் திருமண வயதை எட்டிய மகள்களின் திருமணச் செலவுக்காக தலா ரூ.5 லட்சம் நிதியுதவி, மொத்தம் ரூ.10 லட்சம் வரை வங்கிகள் மூலம் வழங்கப்படும்.

விபத்தால் இறந்த அரசு ஊழியரின் பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி படிக்கும் மகளுக்கு உயர்கல்வி உதவியாக ரூ.10.00 இலட்சம் வரை வங்கிகள் மூலம் வழங்கப்படும்.

பணிபுரியும் காலத்தில் இயற்கை மரணம் ஏற்பட்டால், ரூ.10 லட்சம் டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் தொகையாக வழங்கப்படும்.

தனிப்பட்ட கடன் வீட்டுக் கடன் மற்றும் கல்விக் கடஆகியவற்றைப்பெறும் போது அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் வட்டிச் சலுகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நேர்வில், வரும் 2025-26 ஆம் நிதியாண்டில் அரசு ஊழியர்களுக்கு இந்த காப்பீட்டுத் தொகையை வழங்கத் தயாராக இருக்கும் வங்கிகளுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoUs) செய்து கொள்ள உள்ளது. கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறையானது. வங்கிகள் மூலம் இறந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு இந்த சலுகைகளை சரியான நேரத்தில் வழங்குவதை ஒருங்கிணைக்கும் என சட்டமன்ற பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்காணும், வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில், சம்பளக் கணக்கின் கீழ் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக, அரசு ஊழியர்களின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவு செய்து பட்டியலில் சேர்க்கப்பட்ட வங்கிகளுடன் பகிரப்பட வேண்டும்.

எனவே, பேரூராட்சிகள் துறையில் காலமுறை ஊதியமேற்றமுறையில் பணிபுரியும் 490 பேரூராட்சி அலுவலர்கள் (ம) பணியாளர்கள், 17 மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர், மற்றும் அவ்அலுவலக பணியாளர்கள், பொறியாளர்கள் ஆகியோரின் விவரங்களை இத்துடன் இணைப்பட்டுள்ள படிவத்தில் உடன் பூர்த்தி செய்து மண்டல வாரியான தொகுப்பறிக்கையாக இவ்வாணையரகத்திற்கு 09.04.2025-க்குள் தனி நபர்மூலம் அனுப்பி வைக்குமாறு அனைத்து மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர்களை இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download this Proceedings

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.