பண்ணைக் குட்டையில் மூழ்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - Thulirkalvi

Latest

Thursday, 6 March 2025

பண்ணைக் குட்டையில் மூழ்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், எழுவப்பள்ளி கிராமத்திலுள்ள பண்ணைக் குட்டையில் மூழ்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வட்டம், எழுவப்பள்ளி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்றுவந்த மாணவன் நித்தின் (வயது 8) த/பெ. மணிகண்டன் என்பவர் இன்று (5.03.2025) பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் பள்ளிக்கு அருகிலுள்ள தனியருக்குச் சொந்தமான பண்ணைக் குட்டையில் தவறி விழுந்த நிலையில் மாணவனைக் காப்பாற்ற முயன்ற பள்ளியின் தலைமையாசிரியர் திரு.கௌரிசங்கர் (வயது 53) ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இச்சம்பவத்தில், உயிரிழந்த பள்ளி மாணவன் நித்தின் மற்றும் தலைமையாசிரியர் திரு.கௌரிசங்கர் ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

No comments:

Post a Comment