ஆஸ்திரேலியா நாட்டின் மெல்பேர்ன் நகரில் நடைபெற்ற டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற திரு.ப்ரித்வி சேகர் துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து பரிசுக் கோப்பையை காண்பித்து வாழ்த்து பெற்றார். - Thulirkalvi

Latest

Friday, 31 January 2025

ஆஸ்திரேலியா நாட்டின் மெல்பேர்ன் நகரில் நடைபெற்ற டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற திரு.ப்ரித்வி சேகர் துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து பரிசுக் கோப்பையை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை ஆஸ்திரேலியா நாட்டின் மெல்பேர்ன் நகரில் நடைபெற்ற செவித்திறன் குறைபாடுடையோருக்கான ஆஸ்திரேலியா டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற திரு.ப்ரித்வி சேகர் அவர்கள் சந்தித்து பரிசுக் கோப்பையை காண்பித்து வாழ்த்து பெற்றார். 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக்கிட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகின்றது. தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் போட்டிகளில் கலந்து கொள்ள வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சி பெறுதல், அதற்கான போக்குவரத்துச் செலவுகளை மேற்கொள்ளுதல், சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது, மேம்பட்ட பிரத்யோகமான விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்துதல் ஆகிய செலவுகளை ஈடுகட்ட எலைட் திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றது. 

தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (Elite) திட்டத்தின் கீழ் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வருடாந்திர ஊக்கத் தொகை ரூ.25 இலட்சத்தை தற்போது 30 இலட்சமாக உயர்த்தி வழங்கி வருகின்றது. மேலும் இத்திட்டத்தில் பயன் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை 12 லிருந்து தற்போது 27-ஆக உயர்த்தப்பட்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பயன்பெற்று வருகின்றனர். 

தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (Elite) திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டு பயன்பெற்று வரும் மாற்றுத்திறனாளி டென்னிஸ் வீரர் திரு. ப்ரித்வி சேகர் அவர்கள் ஆஸ்திரேலியா நாட்டின் மெல்பேர்ன் நகரில் 24.1.2025 முதல் 26.1.2025 வரை நடைபெற்ற செவித்திறன்  பிறகு, தொடர்ந்து ஐரோப்பிய அளவிலான 3 டென்னிஸ் போட்டிகளில் முன்னணி விளையாட்டு வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பை பெற்றதால், ஆஸ்திரேலியா டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் செலவுகள் குறித்த அச்சமின்றி விளையாடி வெற்றி பெற்றார். 

தங்கள் பிள்ளைகளின் விளையாட்டு ஆர்வத்தை புரிந்து அவர்களை பல்வேறு போட்டிகளில் விளையாட வைக்கும் பெற்றோர்களை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும். மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்கள். இவர் சென்ற ஆண்டும் செவித்திறன் குறைபாடுடையோருக்கான ஆஸ்திரேலியா டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு.ஜெ.மேகநாத ரெட்டி. இ.ஆப., மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 அரசின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள:

No comments:

Post a Comment