பல்வேறு பிரிவுகளின் கீழ் சாதனை புரிந்த சிறுவர்களுக்கு தேசிய விருது: திரௌபதி முா்மு நாளை வழங்குகிறார் Draupadi Murmu to present national award to boys who have achieved achievements under various categories tomorrow - Thulirkalvi

Latest

Sunday 22 January 2023

பல்வேறு பிரிவுகளின் கீழ் சாதனை புரிந்த சிறுவர்களுக்கு தேசிய விருது: திரௌபதி முா்மு நாளை வழங்குகிறார் Draupadi Murmu to present national award to boys who have achieved achievements under various categories tomorrow

பல்வேறு பிரிவுகளின் கீழ் சாதனை புரிந்த சிறுவர்களுக்கு தேசிய விருது: திரௌபதி முா்மு நாளை வழங்குகிறார்

 குழந்தைகளின் சிறப்பான சாதனைகளைப் பாராட்டி வழங்கப்படும் மத்திய அரசின் ‘பிரதமா் ராஷ்டிரிய பால் புரஸ்கா்’ விருதை 11 சிறுவர்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை(ஜன.23) வழங்கி கௌவரவிக்கிறாா். 

 தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான கலை, கலாசாரம், வீர தீர செயல், புதுமை, சமூக சேவை, கல்வி மற்றும் விளையாட்டு ஆகிய ஆறு பிரிவுகளில் சிறந்து விளங்கியதற்காக 5 -18 வயதுக்குட்பட்ட இந்திய சிறுவர்களுக்கு ‘பிரதமா் ராஷ்டிரிய பால் புரஸ்கா்’ விருது வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு, கலை மற்றும் கலாச்சாரத் துறையில் (4), வீர தீர செயல் (1), புதுமை (2), சமூக சேவை (1) மற்றும் விளையாட்டு (3) என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 சிறுவர்களுக்கு ‘பிரதமா் ராஷ்டிரிய பால் புரஸ்கா்’ வழங்கப்படுகிறது. இந்நிலையில், மேற்கூறிய பிரிவுகளின் கீழ் சாதனை புரிந்த 11 சிறுவர்களுக்கு ‘பிரதமா் ராஷ்டிரிய பால் புரஸ்கா் விருது- 2023’ வழங்கப்படுகிறது. இந்த விருதினை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாளை திங்கள்கிழமை வழங்குகிறார்.

 இந்த விருது, 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து ஆறு சிறுவர்களும், ஐந்து சிறுமிகளும் இடம்பெற்றுள்ளனர். பிரதமா் ராஷ்டிரிய பால் புரஸ்கா் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் பதக்கம், ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதைதொடர்ந்து, விருது பெறும் சிறுவர், சிறுமிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி வரும் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடுகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Draupadi Murmu to present national award to boys who have achieved achievements under various categories tomorrow

  President Draupadi Murmu on Monday (Jan. 23) honored 11 children with the central government's 'Pratham Rashtriya Pal Puraskar' award, which is given in recognition of outstanding achievements of children.

  The 'Pratham Rashtriya Pal Purasak' award is given to Indian boys in the age group of 5-18 years for excellence in six categories of arts, culture, heroism, innovation, social service, education and sports worthy of national recognition. Accordingly, this year, 'Pratham Rashtriya Pal Purasak' is awarded to 11 boys selected from all parts of the country in the field of Arts and Culture (4), Heroism (1), Innovation (2), Social Service (1) and Sports (3). In this case, 11 boys who have achieved achievements under the above categories are given the 'Prime Rashtriya Pal Purasak Award- 2023'. President Draupadi Murmu will present the award on Monday.

  The award includes six boys and five girls from 11 states and union territories. Each recipient of the Pratham Rashtriya Pal Purasak Award is presented with a medal, a cash prize of Rs.1 lakh and a certificate. Following this, Prime Minister Narendra Modi will interact with the awardees on Tuesday, according to an official statement.

No comments:

Post a Comment