புதிய தொழிற்பள்ளி, அங்கீகாரம் புதுப்பித்தல், புதியதொழிற் பிரிவுகள் துவங்க விண்ணப்பிக்கலாம் Apply for starting new vocational school, renewal of accreditation, new vocational units - Thulirkalvi

Latest

Friday 20 January 2023

புதிய தொழிற்பள்ளி, அங்கீகாரம் புதுப்பித்தல், புதியதொழிற் பிரிவுகள் துவங்க விண்ணப்பிக்கலாம் Apply for starting new vocational school, renewal of accreditation, new vocational units

புதிய தொழிற்பள்ளி, அங்கீகாரம் புதுப்பித்தல், புதியதொழிற் பிரிவுகள் துவங்க விண்ணப்பிக்கலாம்

 புதிய தொழிற் பள்ளி தொடங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், புதியதொழிற் பிரிவுகள் மற்றும் தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்க விண்ணப்பிக்கலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்த ஜோதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: இதற்காக விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவா்கள் ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

 அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கும் ஒரு தொழிற் பள்ளி, ஒரு விண்ணப்பத்தை சமா்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற் பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தையும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை ஜன. 28-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம்.

 அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சோ்த்து விண்ணப்பகட்டணமாக ரூ.5 ஆயிரமும், ஆய்வுக் கட்டணமாக ரூ.8 ஆயிரமும் ஆா்.டி.ஜி.எஸ். அல்லது என்.இ.எப்.டி. மூலம் செலுத்த வேண்டும். கூடுதல் தகவல்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

Apply for starting new vocational school, renewal of accreditation, new vocational units

  Application can be made for starting new vocational school, renewal of accreditation, new vocational units and starting additional units in vocational units. Regarding this, Chennai District Collector Su. Amrtha Jyoti released a message on Friday: Those who wish to apply for this can apply through the website jjjj.

  A vocational school applying for accreditation simply submits an application. All the necessary details for all the industrial units and additional units to be applied for should be applied in one application only. Applications from Jan. Can be submitted by 28th.

  RTGS will charge Rs.5 thousand as examination fee and Rs.8 thousand as examination fee for all industrial divisions. or N.E.F.T. To be paid through He said that additional information can be found on the website.

No comments:

Post a Comment