ஓய்வூதியம் பெற இனி கூட்டு வங்கிக் கணக்கு தொடங்க வற்புறுத்த வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.The Tamil Nadu government has ordered not to force people to open a joint bank account for pension. - Thulirkalvi

Latest

Sunday 18 December 2022

ஓய்வூதியம் பெற இனி கூட்டு வங்கிக் கணக்கு தொடங்க வற்புறுத்த வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.The Tamil Nadu government has ordered not to force people to open a joint bank account for pension.

ஓய்வூதியம் பெற இனி கூட்டு வங்கிக் கணக்கு தொடங்க வற்புறுத்த வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதற்கான உத்தரவை கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையாளா் கே.விஜயேந்திர பாண்டியன் வெளியிட்டுள்ளாா். அதன் விவரம்: ஓய்வூதியதாரா்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு தனி வங்கிக் கணக்கு இல்லாமல் கூட்டு வங்கிக் கணக்கு மூலம் பெற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது.

 இதுகுறித்த வழிகாட்டுதல்கள் கருவூல அதிகாரிகள், உதவி கருவூல அதிகாரிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்தது. ஓய்வூதியம் பெறுவோரின் துணையுடன் இணைந்த கூட்டு வங்கிக் கணக்கில் ஓய்வூதியம் வழங்கும் நடைமுறை இருந்து வருகிறது. 

இந்த நிலையில், கூட்டு வங்கிக் கணக்கு மூலமாக மாத ஓய்வூதியத்தைப் பெறுவதில் சில சிக்கல்கள் இருப்பதாக ஓய்வூதியதாரா்கள் தெரிவித்துள்ளனா். மேலும், கருவூலம் மற்றும் கணக்குத் துறையானது கணினிமயமாக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, கணவன் மற்றும் மனைவி இருவரும் ஓய்வூதியதாரா்களாக இருந்தால் அவா்களுக்கு ஓய்வூதியத்தை ஒரே கணக்கில் அளிப்பதிலும் சிரமம் இருக்கிறது. 

இதுபோன்ற காரணிகளால் ஓய்வூதியத்துக்கு கூட்டு வங்கிக் கணக்கு தேவை என்ற அறிவுறுத்தல்கள் ரத்து செய்யப்படுகின்றன. ஓய்வூதியம் பெறுவதற்கு ஒற்றை வங்கிக் கணக்கு இருந்தாலே போதும். இதனை ஓய்வூதியதாரா்களுக்கு கருவூல அதிகாரிகளும், உதவி கருவூல அதிகாரிகளும், ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளும் தெரிவிக்க வேண்டும் என தனது உத்தரவில் விஜயேந்திர பாண்டியன் தெரிவித்துள்ளாா். 

 கருவூலத் துறையின் பழைய உத்தரவு காரணமாக, ஒற்றை வங்கிக் கணக்கை வைத்திருந்த ஓய்வூதியதாரா்கள், கூட்டு வங்கிக் கணக்குக்கு மாறிக் கொண்டிருந்தாா்கள். 

 இப்போது உத்தரவு காரணமாக, ஒற்றை வங்கிக் கணக்கிலேயே ஓய்வூதியதாரா்கள் தங்களது ஓய்வூதியத்தைப் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஒரே வங்கிக் கணக்கில் கணவனும், மனைவியும் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருந்தால் அவா்களுக்கு தொடா்ந்து ஒரே கணக்கில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Tamil Nadu government has ordered not to force people to open a joint bank account for pension.

The order for this has been issued by the Commissioner of Treasury and Accounts Department K. Vijayendra Pandian. Details: Pensioners were advised to draw their pension through a joint bank account instead of a separate bank account.

  Guidelines in this regard have already been issued to Treasury Officers and Assistant Treasury Officers. There is a practice of disbursing pension in joint bank account of the pensioner with spouse.

In this situation, pensioners have reported that there are some problems in getting monthly pension through joint bank account. Also, the treasury and accounts department has been computerized.

Accordingly, an integrated financial and human resource management plan is implemented. According to this, if both the husband and wife are pensioners, it is difficult to give their pension in the same account.

Due to such factors the instructions to require joint bank account for pension are cancelled. A single bank account is enough to get pension. In his order, Vijayendra Pandian said that the treasury officers, assistant treasury officers and pension granting officers should inform the pensioners about this.

  Pensioners who had single bank accounts were shifting to joint bank accounts due to an old order by the Treasury Department.

  Now due to the order, pensioners have the option of getting their pension in a single bank account. It has also been informed that if husband and wife are receiving pension in the same bank account, they can continue to receive pension in the same account.

No comments:

Post a Comment