அரையாண்டு விடுமுறையில் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தக்கூடாது -கல்வித்துறை அறிவிப்புClasses should not be held in schools during half-yearly vacations - Education Department Notification - Thulirkalvi

Latest

Saturday 24 December 2022

அரையாண்டு விடுமுறையில் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தக்கூடாது -கல்வித்துறை அறிவிப்புClasses should not be held in schools during half-yearly vacations - Education Department Notification

அரையாண்டு விடுமுறையில் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தக்கூடாது -கல்வித்துறை அறிவிப்பு 

1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு மற்றும் பருவத் தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில், விடுமுறை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சில அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. அதில், 'எண்ணும் எழுத்தும் திட்டம் சார்பாக 1 முதல் 3-ம் வகுப்பு வரையில் கற்பிக்கும் அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவில் 2.1.2023 முதல் 4.1.2023 வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

இதன் காரணமாக, 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை முடிந்து 5.1.2023 அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்றும், மற்ற வகுப்பு மாணவர்களுக்கு (6 முதல் 12-ம் வகுப்பு வரையில்) ஏற்கனவே அறிவித்தது போல 2.1.2023 அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், எண்ணும் எழுத்தும் பயிற்சியில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

 4, 5-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகைதந்து, 3-ம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள், இதர பொருட்கள் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்து பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தனியார் பள்ளிகளை பொறுத்தவரையில், அரையாண்டு விடுமுறை முடிந்து 2-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 இதுதவிர, அரையாண்டு விடுமுறை நாட்களில் பள்ளிகள் நேரடி மற்றும் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாட ஆசிரியர்கள் மூலம் வீட்டுப்பாடங்கள் மற்றும் செய்முறை பதிவேடுகள் ஆகியவற்றை செய்து பள்ளி திறக்கும் நாளில் கொண்டுவரச் சொல்லி அறிவுறுத்தலாம் என்றும் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Classes should not be held in schools during half-yearly vacations - Education Department Notification

As the half-yearly and term examinations for the students of class 1 to 12 are over, the school education department has issued some announcements regarding the holidays. It said, 'All types of government and government-aided teachers who teach from 1st to 3rd class on behalf of the numeracy program will be trained at the Union level from 2.1.2023 to 4.1.2023.

Due to this, it has been informed that the schools will open on 5.1.2023 after half-yearly vacation for students of class 1 to 5 and for other classes (class 6 to 12) on 2.1.2023 as already announced. Also, teachers teaching classes 1 to 3 should regularly participate in numeracy and literacy training.

  It has been announced that the teachers of 4th and 5th class should visit the school, check whether the textbooks and other materials for the 3rd term are correct and take steps to give them to the students on the opening day of the schools. In the case of private schools, it has been informed that the first classes will start on the 2nd after the end of the half-year vacation.

  Apart from this, the Department of Education has announced that action will be taken if schools conduct live and special classes during the half-yearly holidays, and teachers may be instructed to make homework and practice records and bring them on the opening day of the school.

No comments:

Post a Comment