மருத்துவத்துக்கான நோபல் பரிசு; ஸ்வீடனை சேர்ந்த ஸ்வான்டே பாபோவுக்கு அறிவிப்பு Nobel Prize in Medicine; Notice to Svante Pabo from Sweden - Thulirkalvi

Latest

Monday 3 October 2022

மருத்துவத்துக்கான நோபல் பரிசு; ஸ்வீடனை சேர்ந்த ஸ்வான்டே பாபோவுக்கு அறிவிப்பு Nobel Prize in Medicine; Notice to Svante Pabo from Sweden

மருத்துவத்துக்கான நோபல் பரிசு; ஸ்வீடனை சேர்ந்த ஸ்வான்டே பாபோவுக்கு அறிவிப்பு

ஸ்டோக்ஹோம்: மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று (அக்.,03) அறிவிக்கப்பட்டது. இதில், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. 

அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும். முதல் நாளான இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 

நோபல் கமிட்டியின் தலைவர் நோபல் பரிசு பெறுபவரின் பெயரை அறிவித்தார். 2022ம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசானது ஸ்வீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய அவரது கண்டுபிடிப்புகளுக்காக' இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Nobel Prize in Medicine; Notice to Svante Pabo from Sweden

Stockholm: The Nobel Prize for Medicine was announced today (Oct. 03). In this, Swedish scientist Svante Pabo has been awarded the Nobel Prize. Every year Nobel Prizes are awarded to those who have made great achievements in 6 fields of medicine, physics, chemistry, economics, peace and literature.

In that way, the Nobel Prizes for the year 2022 are being announced from today in Stockholm, the capital of Sweden. Only the Nobel Peace Prize will be announced in Norway. On the first day, the Nobel Prize for Medicine was announced today.

The Chairman of the Nobel Committee announced the name of the Nobel laureate. It has been announced that the Nobel Prize in Medicine for the year 2022 will be given to Swedish scientist Svante Pabo. He has been awarded the Nobel Prize for his 'discoveries of the genomes of extinct hominins and human evolution'.

No comments:

Post a Comment