SMC ஆசிரியர்கள் நியமனம் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Thulirkalvi

Latest

Thursday, 12 June 2025

SMC ஆசிரியர்கள் நியமனம் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

SMC ஆசிரியர்கள் நியமனம் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

பார்வை 1-ல் காணும் அரசாணையின்படி தொடக்கக் கல்வி இயக்ககக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு / நகராட்சி / மாநகராட்சி / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள நிரப்பத் தக்க காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் / பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை பள்ளி மாணவர்களின் கல்வி நலன் கருதி பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக தகுதிவாய்ந்த நபர்களைக் கொண்டு தொகுப்பூதியத்தில் தற்காலிக அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு ரூ.12,000/- பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ரூ.15,000/- என மதிப்பூதியம் வழங்கி காலிப்பணியிடங்கள் நிரப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 2024-2025-ம் கல்வி ஆண்டில் தகுதிவாய்ந்த நிரப்பத்தக்க காலிப் பணியிடத்தில் தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு மார்ச் 2025 வரை மதிப்பூதியம் பெறும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

Download DEE Proceedings

தற்போது, 2025-2026-ம் கல்வியாண்டில் மேற்படியான தற்காலிக ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்கும் வகையில் பார்வை 3-ல் காணும் இவ்வியக்க்கச் செயல்முறைகள் மூலம் ரூ.934178000/- (ரூபாய் தொன்னூற்று மூன்று கோடியே நாற்பத்தோரு இலட்சத்து எழுபத்து எட்டாயிரம் மட்டும்) நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்று பணிபுரிந்து வரும் ஆசிரியர்களக்கு ஏப்ரல் 2025 மாதம் மதிப்பூதியம் வழங்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு பார்வை 4-ல் காணும் பல்வேறு மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டது.

எனவே, பார்வை 3-ல் கண்டவாறு பெறப்பட்ட நிதியினை ஏப்ரல் 2025 மாதம் மற்றும் 2025-2025-ம் கல்வி ஆண்டிற்கான ஜீன்2025 மற்றும் ஜீலை 2025 ஆகிய மாதங்கள் வரை தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் /பட்டதாரி ஆசிரியர்களக்கு மதிப்பூதியம் பெறும் வகையில் IFHRMS மூலமாக தேவையுள்ள கீழ்க்கண்ட மாவட்டங்களுக்கு ரூ.27,20,94,000 (ரூபாய் இருபத்து ஏழு கோடியே இருபது இலட்சத்து தொன்னூற்று நான்காயிரம் மட்டும்) நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது,

No comments:

Post a Comment