குளிர்காலத்தில் மூட்டு வலி இருக்கும் போது இதை சாப்பிடுங்க சட்டுனு குறையும்!Eat this when you have joint pain in winter and it will go away quickly!

குளிர்காலத்தில் மூட்டு வலி இருக்கும் போது இதை சாப்பிடுங்க சட்டுனு குறையும்!


மூட்டு வலி வந்தால் எல்லா நேரங்களிலும் இருக்கத்தான் செய்யும். ஆனால் குளிர்காலங்களில் சற்று கூடுதலாகவே உணரலாம். அதைகுளிர்காலத்தில் மூடு விறைப்பு மற்றும் மூட்டு அசைவுகளை கட்டுப்படுத்தும் வலியை அதிகம் எதிர்கொள்ளலாம். வெப்பநிலை வீழ்ச்சி மற்றும் மூட்டு வலி மோசமடைதல் போன்றவற்றுக்கு இடையேயான தொடர்பு குறித்து தெளிவான ஆராய்ச்சிகள் இல்லை.

 ஆனால் சரியான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை போன்றவை இணைந்து இதை சமாளிக்க உதவும் .அத்தகைய உணவுகளை தான் இப்போது பார்க்க போகிறோம்.மூட்டுவலி தவிர்க்கவும் மூட்டு வலி இருப்பவர்கள் வலி தீவிரமாவதை குறைக்கவும் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். உடலை சூடாக வைத்திருங்கள்.

 உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள். உடலை சரியாக ஹைட்ரேட் செய்யுங்கள். வழக்கமான உடற்பயிற்சி மூலம் ஆரோக்கியமான எடையை பராமரிக்கலாம். வைட்டமின் டி மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு தேவையானது. கீல்வாதம் கொண்டிருப்பவர்களுக்கு குளிர்காலத்துக்கு உணவு சிகிச்சை இல்லை என்றாலும் சில உணவுகள் வீக்கத்தை எதிர்த்து போராட கூடும். 

மேலும் இவை எலும்புகளை வலுப்படுத்துகின்றன. மேலும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. இந்த உணவுகளை உட்கொள்வது உடலுக்கும் நன்மை பயக்கும் மூட்டு வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவும். ​மூட்டு வலி குறைய சால்மன் மீன் (Fatty fish )சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன் வகைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை அளிக்கிறது. இவை மூட்டு வலியை போக்க செய்யும். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மூட்டு வலியின் தீவிரம், காலை நேரத்தில் உண்டாகும் மூட்டு விறைப்பு மற்றும் மூட்டுகளின் வலி எண்ணிக்கையை குறைக்க உதவும் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன.

 மேலும் இதில் ஈகோசாபெண்டெனோயிக் அமிலம் மற்றும் டோகோசாஹெக்ஸெனோயிக் அமிலம் போன்ற கடல் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது நோயெதிர்ப்பு உயிரணு உற்பத்தி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்ஹும் சைட்டோகைன்கள் குறைக்கவும் உதவும். அதனால் வாரத்தில் இரண்டு முறை 3-4 அவுன்ஸ் மீன்கள் பரிந்துரைக்கின்றனர். ​மூட்டு வலி குறைய பூண்டு (Garlic)பூண்டு மற்றும் வெங்காயம் போன்ற பிற வேர் காய்கறிகளில் டயலில் டை சல்பேட் உள்ளது. 

இது அழற்சி எதிர்ப்பு கலவை ஆகும். இது வீக்கத்தை எதிர்த்து போரடவும், வலியை குறைக்கவும் மற்றும் ஒட்டுமொத்த மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். இதை சூப், உணவில் சேர்க்கலாம். இது சைட்டோகன்களின் விளைவுகளை குறைக்க உதவுகிறது. மற்றும் வலியை குறைக்கவும் உதவும். ​மூட்டு வலி குறைய கொட்டைகள் மற்றும் விதைகள் ( Nuts and seeds)கொட்டைகள் மற்றும் விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. 

அக்ரூட் பருப்புகள், பாதாம், ஆளி விதைகள், சியா விதைகள் மற்றும் பைன் கொட்டைகள் போன்ற கொட்டைகள் மற்றும் விதைகளின் சிறிய பகுதிகளை எடுத்துகொள்வது மூட்டு வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்கலாம். இது மூட்டு வீகம் மற்றும் இணைப்பு திசு பிரச்சனைகளின் இருந்தும் நிவாரணம் அளிக்க செய்யும். மூட்டு வலி குறைய (Ginger)இஞ்சியை புதிய அல்லது உலர்ந்த வடிவில் எடுத்துகொல்வது மூட்டு வீக்கத்துக்கு நிவாரணம் அளிக்கும். இதை தினமும் தேநீர் வடிவில் எடுத்துகொள்ளலாம். 

உணவில் சேர்க்கலாம். ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். இது உடலில் வீக்கத்தை ஊக்குவிக்கும் பொருள்களின் உற்பத்தியை தடுக்கிறது.

Joint pain is always there. But in winters it can feel a bit extra. In winter, you may face more joint stiffness and pain that restricts joint movement. There is no clear research on the relationship between temperature drop and worsening of joint pain.

  But the right diet and lifestyle together can help overcome this. We are going to look at such foods now. People with joint pain should focus on some things to avoid joint pain and reduce the severity of the pain. Keep the body warm.

  Be physically active. Hydrate the body properly. A healthy weight can be maintained through regular exercise. Vitamin D and Omega 3 fatty acids are essential for the body. Although there is no winter food cure for gout sufferers, certain foods can help fight inflammation.

They also strengthen the bones. Also improves health. Consuming these foods is also beneficial for the body and helps to relieve joint inflammation. Fatty fish for reducing joint pain Fatty fish such as salmon and mackerel are rich in omega 3 fatty acids and vitamin D. It provides anti-inflammatory properties. These will relieve joint pain. Several studies have shown that omega-3 fatty acids can help reduce the severity of joint pain, morning stiffness, and number of joint pains.

  It also contains marine fatty acids such as eicosapentaenoic acid and docosahexaenoic acid. It can help reduce immune cell production and cytokines that cause inflammation. So they recommend 3-4 ounces of fish twice a week. Garlic and other root vegetables like garlic and onions contain disulfate to reduce joint pain.

It is an anti-inflammatory compound. It can help fight inflammation, reduce pain and improve overall joint health. It can be added to soups and meals. It helps reduce the effects of cytokines. Nuts and seeds to reduce joint pain Nuts and seeds are rich in healthy fats and omega 3 fatty acids.

Taking small portions of nuts and seeds such as walnuts, almonds, flax seeds, chia seeds, and pine nuts may provide relief from joint inflammation. It also provides relief from joint inflammation and connective tissue problems. Reduces joint pain (Ginger) Taking ginger in fresh or dried form can relieve joint inflammation. It can be taken daily in the form of tea.

Can be added to food. Mix it with a cup of warm water and drink it. It inhibits the production of substances that promote inflammation in the body.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.