எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக பள்ளிகளில் சார்நிலை அலுவலர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

0 rajkalviplus

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் அடிப்படைக் கற்றலை மேம்படுத்தும் நோக்கில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மாநில அடைவு ஆய்வு (SLAS) மற்றும் அடிப்படை நிலை மதிப்பீடுகளின் முடிவுகளின் அடிப்படையில் கற்றல் இடைவெளியைக் குறைத்து ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் வகுப்பு நிலைக்கு ஏற்ப தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசித்தல் திறன் மற்றும் அடிப்படை கணிதத் திறன்களை முழுமையாகக் கற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. 

மாணவர்களின் தனிப்பட்ட கற்றல் நிலையை புரிந்து அவர்களை அரும்பு, மொட்டு, மலர் என மூன்று நிலைகளில் வகைப்படுத்தி முன்னேற்றத்தை கண்காணிக்கும் நடைமுறை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்களுக்கு Students Workbook (SWB) மற்றும் ஆசிரியர்களுக்கு Teachers Handbook (THB) வழங்கப்பட்டுள்ளன. வகுப்பறை கற்பித்தல் மற்றும் கற்றல் நடவடிக்கைகள் இவற்றை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும். 

இத்திட்டத்தின் ஆக்கபூர்வமான செயல்பாட்டிற்காக கண்காணிப்பு அதிகாரிகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். பள்ளி கண்காணிப்புகள் மேற்கொள்ளும் போது வகுப்பறை. நடைமுறைகள், ஆசிரியர்கள் SWB மற்றும் THB-ஐப் பயன்படுத்தும் விதம், மாணவர்களின் பங்கேற்பு நிலை, தனிப்பட்ட கற்றல் வழிகாட்டல் வழங்கப்படுகிறதா என்பதைப் பரிசீலிக்க வேண்டும். மேலும், மாதாந்திர மற்றும் காலாண்டு மதிப்பீடுகள் மூலம் மாணவர்களின் முன்னேற்றம் பதிவு செய்யப்பட வேண்டும். கற்றல் நிலை முன்னேற்றம் (அரும்பு-மொட்டு-மலர்) சதவீதம் கண்காணிக்கப்பட்டு, பள்ளி நிலை ஆய்வுக் கூட்டங்களில் (School Level Review Meetings) கூட்டப்பொருளாக சேர்க்கப்பட வேண்டும். 

ஆசிரியர்களின் பயிற்சி மற்றும் வழிகாட்டல் தொடர்பான மதிப்பீடு கண்காணிப்பு அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆசிரியர்கள் பயிற்சிகளில் பங்கேற்றுள்ளனரா, பயிற்சிக்குப் பிந்தைய நடைமுறைகள் வகுப்பறையில் பயன்படுத்தப்படுகிறதா, மற்றும் பயிற்சியில் கற்ற அறிவு மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிப் பார்வை (Palli Parvai) செயலியை பயன்படுத்தி அலுவலர்கள் நேரடியாக மாணவர்களின் வாசிப்பு, எழுதுதல் மற்றும் கணிதத் திறன்களை பரிசோதித்து, உடனடி விளைவுகளை வழங்கிட வேண்டும். 

முக்கிய செயல்திறன் குறியீடுகள் (Key Performance Indicators - KPIs) எனப்படும் கல்வி இலக்குகள், SWB மற்றும் கற்றல் வளப் பயன்பாடு சதவீதம், கற்றல் நிலை முன்னேற்றம், ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்பு, பள்ளிப் பார்வை செயலி இலக்குகள் நிறைவேற்றம், பள்ளி மேலாண்மை குழுக் கூட்டங்களில் பெற்றோர் பங்கேற்பு போன்ற தரவுகள் அனைத்தும் EMIS (Educational Management Information System) வழியாக மாதந்தோறும் பதிவு செய்யப்பட வேண்டும். இத்தரவுகள் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான ஆய்வுக் கூட்டங்களில் பயன்படுத்தப்பட்டு அடுத்தடுத்த முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் வகையில் அமைக்கப்பட வேண்டும். 

மேற்குறிப்பிட்ட செயல்திறன் குறியீடுகள் (Key Performance Indicators - KPIs) எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கு பின்வரும் வகையில் வழங்கப்படுகிறது. 



கண்காணிப்பு அலுவலர்கள் தங்கள் நிர்வாக எல்லைக்குள் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாதாந்திர அடிப்படையில் பயண திட்டங்களைத் தயாரித்து பார்வைகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளி கண்காணிப்புக்கு முன் பள்ளியின் முந்தைய மதிப்பீடுகள் மற்றும் EMIS தரவுகளைப் பரிசீலித்து முக்கிய கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளைத் தீர்மானிக்க வேண்டும். கண்காணிப்பு முடிந்ததும் சிறந்த நடைமுறைகளை பாராட்டி ஊக்குவிக்கவும், திருத்த வேண்டிய அம்சங்களை ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் வேண்டும். 

இதன் அடிப்படையில், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் இணைந்து செயல்திட்டத்தினை நிறைவேற்ற வேண்டும். பள்ளிகளில் கண்காணிப்பு அலுவலர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு ஆய்வும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை வலுப்படுத்துவதாகவும் ஆய்வு அறிக்கைகள் மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கு துணைபுரிவதாகவும் அமைந்திடல் வேண்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.