பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31/07/2025

0 rajkalviplus
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.07.2025 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31/07/2025

திருக்குறள்: 

குறள் 184: கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல். விளக்க உரை: எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது. 

பழமொழி : 

Your attitude determines your altitude. உங்கள் மனநிலை தான் உங்கள் உயரத்தை தீர்மானிக்கும். 

இரண்டொழுக்க பண்புகள் : 

 1. இயற்கை வளங்கள் கடவுள் நமக்கு அளித்த கொடை. 

 2. எனவே அவற்றை பேணிப் பாதுகாப்பேன். பொன்மொழி : பிரார்த்தனைகளில் மிக உயர்ந்தது பொறுமை - புத்தர். 

பொது அறிவு : 

01.இந்தியாவில் யாருடைய பிறந்தநாள் தேசிய விளையாட்டு தினமாக(ஆகஸ்ட் 29) கொண்டாடப்படுகிறது? மேஜர் தியான் சந்த் Major Dhyan Chand. 
02. முதன் முதலில் இரும்பு கப்பலை செய்தவர் யார்? வில்லியம் வில்கின்சன் William Wilkinson 

English words : 

Shovel - a tool used for picking up and moving sand or snow. மண் அல்லது பனி அகற்றும் கருவி Grammar Tips: tion rules If the base word ends with t or te Add 'tion' Example Act-action Complete-completion Invent-invention Create-creation Solute- solution Locate- Location Educate- Education Translate- Translation Pollute- Pollution Select -Selection Correct- Correction 

அறிவியல் களஞ்சியம் : 

உணவைச் சேகரித்து வைப்பது எறும்பின் வேலைகளில் மிக முக்கியமானது. ஆனால் இப்படி சேகரித்துவைக்கும் உணவு, மழைக்காலத்தில் பூசனம் பூத்து கெட்டுப்போய் விடாமல் இருக்க அவை ஒரு வேதிப்பொருளை பயன்படுத்துகின்றன. அந்த வேதிப்பொருளும், அதன் இயல்பும் தற்போது கண்டறியப்பட்டு மருந்து தயாரிப்பில், அது பயன்படுத்தப்படுகிறது. 

 நீதிக்கதை உழைப்பின் பயன் 

ஒரு விவசாயிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். விவசாயிக்கு வயது அதிகமானதால் இறந்து போகும் நிலையில் இருந்தபோது, தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளுக்கு தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக்கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களிலும் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார். பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் சொல்லிய புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள். முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது. இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும் என்று கடைசி மகனின் நிலத்தையும் தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே! மூவரும் சேர்ந்து தோண்டியது வீணாக வேண்டாம் என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்து நீர் பாய்ச்சி உரம் போட்டார்கள். ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம். இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள். 

நீதி : உழைப்பினால் வரும் பணம் அதிஷ்டம் தரும். 

இன்றைய செய்திகள் 31.07.2025 

 ⭐தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது- துணை முதலமைச்சர் பெருமிதம் 

 ⭐தமிழகத்தின் கிராமப்புறங்களில் செயல்படக்கூடிய டீக்கடைகள் முதல் கல்யாண மண்டபம் வரை (119 சேவை தொழில்களுக்கு) கட்டணம் செலுத்தி தொழில் உரிமம் பெற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

 ⭐ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை பாதுகாப்பு படையினர் அதிரடி. 

 ⭐இந்தியாவுக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை மக்கள் அச்சப்படவேண்டாம் என்று அறிவுறுத்தல். 

 🏀 விளையாட்டுச் செய்திகள் 

🏀 கடைசி லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றது. 

 🏀இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. 

Today's Headlines 

⭐Tamil Nadu is the leading state in attracting industrial investments - Proudly says the deputy CM. 

⭐The Tamil Nadu government has announced that 119 service industries (from tea stalls to wedding halls) operating in rural areas of Tamil Nadu will have to pay a fee and obtain a business license. 

⭐Security forces killed 2 terrorists in Jammu and Kashmir. 

⭐ No tsunami warning for India, people are advised not to panic. 

  SPORTS NEWS

🏀 India qualified for the semi-finals by defeating West Indies in the last league match. 

 🏀 The 5th and final Test match between England and India begins today

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.