Engineering counseling starts on 10th Sep இன்ஜினியரிங் கவுன்சிலிங் செப்., 10ல் துவங்குகிறது - Thulirkalvi

Latest

Sunday 28 August 2022

Engineering counseling starts on 10th Sep இன்ஜினியரிங் கவுன்சிலிங் செப்., 10ல் துவங்குகிறது

'தமிழகத்தில் பொறியியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு, செப்., 10 முதல் நவ., 13 வரை நடக்கும்,'' என, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். 

 பொது கலந்தாய்வு அவர் அளித்த பேட்டி:பொறியியல் கல்லுாரிக்கான மாணவர்கள் சேர்க்கை குறித்த பொது கலந்தாய்வு, ஆக., 25ல் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வு முடிவு வராததால் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது செப்., 7ல், 'நீட்' தேர்வு முடிவு வரும் என அறிவித்துஉள்ளனர்.எனவே, பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கான பொது கலந்தாய்வு, செப்., 10ல் துவங்க உள்ளது. 

 இது நவ., 13 வரை தொடர்ந்து நடக்கும்; நான்கு சுற்றுகளாக நடக்க உள்ளன. செப்., 10 முதல் 12 வரை முதல் சுற்று; செப்., 25 முதல் 27 வரை இரண்டாம் சுற்று; அக்., 13 முதல் 15 வரை மூன்றாம் சுற்று; அக்., 29 முதல் 31 வரை, நான்காம் சுற்று பொது கலந்தாய்வு நடக்கும்.நான்கு சுற்றுகளில் நடக்கும் கலந்தாய்வுகளில், அனைத்து பிரிவுகளும் அடங்கும். அனைத்து பிரிவிலும், அரசு பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவர்களுக்கு மட்டும், இட ஒதுக்கீடு வழங்கப்படும். நவ., 13ல் பொது கலந்தாய்வு முடிந்ததும், 15 முதல் 17 வரை துணை கலந்தாய்வு நடக்கும். 

இதில் இரண்டாம் முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பங்கேற்கலாம். துணை வேந்தர்கள் கருத்தரங்கு, முதல்வர் தலைமையில், வரும் 30ல் நடக்க உள்ளது. கல்லுாரி முதல்வர்கள் கூட்டத்தையும் கூட்ட உள்ளோம். அனைவருடன் கலந்து ஆலோசித்து, கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், விண்ணப்பங்கள் வருகையை கணக்கெடுத்து, எந்த அளவுக்கு சீட்டுகளை உயர்த்த வேண்டும் என்பதை முடிவு செய்து, 30ம் தேதி மாலை அறிவிப்போம். புதிய பாடத்திட்டம் இந்த ஆண்டு முதல், பொறியியல் கல்லுாரிகளில் தமிழ் பாடமும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 

அனைத்து பல்கலைகளிலும், ஒவ்வொரு செமஸ்டரிலும், தமிழ், ஆங்கிலம் இருக்க வேண்டும் என, முடிவு செய்து உள்ளோம்.அரசு, தனியார் கலைக் கல்லுாரி மாணவர்களுக்கு, வேலைக்கான பயிற்சி அளிக்கும் வகையில், புதிய பாடத்திட்டத்தை சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.பொறியியல் கல்லுாரி களில், இந்த ஆண்டே புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு முதல் செமஸ்டரில் முடியாவிட்டால், இரண்டாவது செமஸ்டரில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

"In engineering colleges in Tamil Nadu, public consultation for student admission will be held from September 10 to November 13," Higher Education Minister Ponmudi said.

 Interview given by him on public consultation: It has been announced that the public consultation on the admission of students to the engineering college will be started on August 25. The 'NEET' exam for medical courses has been postponed due to the undelivered results. Currently, they have announced that the results of the 'NEET' exam will be released on September 7. Therefore, the general counseling for engineering college students will start on September 10.

 It will continue till Nov. 13; There will be four rounds. First round from Sept. 10 to 12; Second Round from Sept. 25 to 27; Third round from Oct. 13 to 15; The fourth round of public consultation will be held from Oct 29 to 31. The four rounds of consultation will cover all the divisions. In all categories, reservation will be given only to students who have studied from class VI to Plus 2 in government schools. After the general consultation is over on November 13, the supplementary consultation will be held from 15 to 17.

Students who have passed the second time examination can participate in this. The Vice-Chancellors Seminar, chaired by the Chief Minister, will be held on the 30th. We are also going to convene a meeting of college principals. In consultation with everyone, we will take stock of the number of applications in Arts and Science colleges, decide how much tickets should be raised and announce on the evening of 30th. New Syllabus From this year, Tamil subject has also been introduced in engineering colleges.

We have decided that Tamil and English should be taught in all universities in every semester. In order to provide job training to the students of government and private arts colleges, a decision will be taken to add a new curriculum. In engineering colleges, the new curriculum will be implemented this year. He said that if the students of the College of Arts and Sciences could not complete it in the first semester, the new syllabus would be introduced in the second semester.

No comments:

Post a Comment