மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல E PASS அவசியம் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பிறகு முதல்வர் அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல E PASS அவசியம் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பிறகு முதல்வர் அறிவிப்பு

முதல்வர் - மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனையின் முழ விவரம்


மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல E PASS அவசியம் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பிறகு முதல்வர் அறிவிப்பு 

மண்டலங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாகவும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் பெறுவது அவசியம் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள், மதுரை மற்றும் தேனி மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் ஜூன் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

மற்ற மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடைகள் திறப்பு நேரம் குறைப்பு உள்ளிட்ட நட வடிக்கைககள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கரோனா தடுப்பு நட வடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் களுடன் முதல்வர் பழனிசாமி காணொலி காட்சியில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலர் கே.சண் முகம், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை ஆலோசனை நீடித்தது. கூட்டத் தில் நிறைவாக முதல்வர் பழனிசாமி பேசிய தாவது: 

 கரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கரோனா தொற்று கட்டுப்பாட் டுக்குள் வந்துள்ளது. மாநகராட்சி, மாவட்ட பகுதிகளில் நோய் பாதிக்கப்பட்டவர்களுக் காக ‘கோவிட் கேர் சென்டர்’ மற்றும் ‘கோவிட் ஹெல்த் சென்டர்’கள் அமைக்கப்பட்டு, அதன்மூலம் குணமடைந்தவர்கள் எண் ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் 87 லட்சம் பேர் வசிக்கின்றனர். குறுகலான தெருக் களில் சிறிய வீடுகளில் 6, 7 பேர் வசிக் கின்றனர். 

பல்வேறு தெருக்களில் வசிப்போர் பொதுகழிப்பிடங்களை பயன்படுத்துகின் றனர். இதனால் எளிதாக தொற்று பரவியுள் ளது. மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் இணைந்து வீடு விடாக சென்று ஆய்வு நடத்துகின்றனர். தொற்று அறிகுறிகளை கண்டறிந்து, அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவ முகாம்கள் மட்டுமின்றி தனியாக 600 காய்ச்சல் முகாம் களும் அமைக்கப்பட்டு அங்கும் பரி சோதனை மேற்கொள்ளப்படுகிறது. சென்னையில் படுக்கை எண்ணிக்கை 17,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன், அதிக அளவில் பரிசோதனை செய்யவும் ஆலோ சனை வழங்கப்பட்டுள்ளது. 

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த பகுதியில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் அவர்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகிறது. ஏற்கெனவே அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 மாதங்களுக்கு இலவசமாக அரிசி, சர்க் கரை, பருப்பு, எண்ணெய் வழங்கப்பட் டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் அவர்கள் வசிக்கும் இடத்துக்கே வந்து வழங்கப் படுகிறது. 

 எனவே, சென்னை மாநகராட்சியில் அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத் துவமனை, முகாம்கள் அல்லது நடமாடும் மருத்துவமனைகளில் பரிசோதித்து, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். 

 இன்று முதல் 30-ம் தேதி வரை தற்போது வாகனப் போக்குவரத்துக்கு மண்டல முறை அமலில் உள்ளது. இதனால், மண்டலங்களின் பிற மாவட்டங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வருபவர்களுக்கு நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது. எனவே, ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்ல இ-பாஸ் பெற்றே பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்தனர். 

 இதை ஏற்று, ஜூன் 25 (இன்று) முதல் 30-ம் தேதி வரை மண்டலத்துக்கு இடை யிலான வாகனப் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. மாவட்டத்துக்குள் மட்டும் பயணம் அனுமதிக்கப்படுகிறது. தனியார் கார், இருசக்கர வாகனங்களில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் பெற வேண்டும். பொது பேருந்து போக்குவரத்தும் மாவட்டங்களுக்குள் மட்டும் செயல்படும். மாவட்டங்களில் நோய்ப் பரவல் அதிகம் உள்ள இடங்களை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து, அங்கு அதிக அளவில் பரிசோதனை நடத்த வேண்டும். 

வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களை பரிசோதித்து, தொற்று கண்டறியப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். தமிழகத்தில் தொற்று கண்டறியப்பட்ட வர்களில் 80 சதவீதம் பேருக்கு நோய் அறிகுறிகளே இல்லை. மீதமுள்ள 20 சதவீதம் பேரிலும் 10 சதவீதம் பேருக்குதான் அதிக அறிகுறி தெரிகிறது. அதேநேரத்தில் எங்கெல்லாம் பாதிக் கப்பட்டவர்கள், அவர்களுடன் தொடர் புடையவர்கள் இருக்கிறார்களோ அவர் களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு, சிகிச்சையின் மூலம் பூரண குணமடைய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

தமிழகத் தில் இறப்பு சதவீதம் குறைந்துள்ளது. குணமடைந்தவர்கள் சதவீதம் அதிகரித்துள் ளது. இதற்காக மருத்துவர்கள், செவிலியர் கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டு களை தெரிவித்துக் கொள்கிறேன். கரோனா பரவல் அதிகரித்து, உச்சத்தை தொட்டுதான் குறையும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதிக பரிசோதனை செய்தால்தான் தொற்று இருப்பதை கண்டறிந்து, பரவலை தடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். 

எனவே, பொதுமக்கள் வெளியில் சென் றால் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். மளிகைக் கடை, இறைச்சிக் கடை, வங்கிக்கு சென்றால் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அரசின் வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றினால் கரோனா பரவலை தடுக்க முடியும். இவ்வாறு முதல்வர் பேசினார். 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment