தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம் - துளிர்கல்வி

Latest

Search This Site

தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம்

தனியார் நிறுவனங்களில் வேலைதேடும் இளைஞர்களுக்காக தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார் 
www.thulirkalvi.com

வேலை தேடும் இளைஞர்கள், தனி யார் நிறுவனங்களை இணைத்து புதிய வேலைவாய்ப்புகளை பெற் றுத்தரும் வகையில், ‘தமிழ்நாடு தனியார் துறை வேலை இணை யம்’ என்ற இணையதள வசதியை முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளி யிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற் சித் துறையின் சார்பிiல், தமிழகத்தில் வேலை தேடும் இளைஞர்களையும் வேலையளிக்கும் தனியார் நிறு வனங்களையும் இணையதளம் வழியாக இணைத்து, வேலை வாய்ப்புகளை பெற்றுத்தரும் நோக் கில், பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்ட ‘தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்’ என்ற ‘www.tnprivatejobs.tn.gov.in’ இணையதளத்தை முதல்வர் பழனி சாமி நேற்று தலைமைச் செயல கத்தில் தொடங்கி வைத்தார்.  தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள், இந்த இணையதளத்தில் பதிவு செய்து தங்களின் கல்வித் தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றுக்கு ஏற்ற பணிவாய்ப்புகளை பெற முடியும். தனியார் துறை சார்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தlர மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத் தின் காலிப்பணியிடங்களை இதில் பதிவேற்றம் செய்யலாம். 

வேலை அளிப்போர் மற்றும் வேலை நாடுநர்களுக்கு இந்த சேவைகள், கட்டணமின்றி தமிழக அரசால் வழங்கப்படும். ஏற்கெ னவே அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களால் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.  தற்போதைய சூழலில் இதற்கு மாற்றாக ‘தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்’ மூலம் இணையவழி நேர்காணல், இணை யவழி பணி நியமனம் ஆகிய வசதி களை பயன்படுத்திi தமிழகத்தில் உள்ள வேலை தேடும் இளைஞர் களை இணையம் வழியே தொடர்பு கொண்டு வேலை அளிப்போர் பணி வாய்ப்புகளை அளிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

 இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் துறை அமைச்சர் நிலோஃபர் கபீல், தலைமைச் செயலர் கே.சண்முகம், வேலைவாய்ப்புத் துறை செயலர் முகமது நசிமுத்தீன், வேலைவாய்ப் புத் துறை இயக்குநர் வி.விஷணு ஆகியோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment