கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து உங்கள் பணத்தினை மீளப்பெற்றுக்கொள்வது எப்படி? - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Saturday, June 20, 2020

கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து உங்கள் பணத்தினை மீளப்பெற்றுக்கொள்வது எப்படி?

கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து உங்கள் பணத்தினை மீளப்பெற்றுக்கொள்வது எப்படி? 


 நாம் இன்று பயன்படுத்தும் அன்ரோயிட் மொபைல் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்தே பெற்றுக்கொள்கின்றோம். எனினும் இவற்றில் அனேகமானவை இலவசமாகவே பெறப்படுகின்றது. 

ஆனாலும் கட்டணம் செலுத்தி பெறக்கூடிய அப்பிளிக்கேஷன்களும் காணப்படுகின்றன. இவ்வாறான அப்பிளிக்கேஷன்களை கொள்வனவு செய்ததன் பின்னர் அதற்காக செலுத்தப்பட்ட பணத்தினை ஏதாவது ஒரு காரணம் கருதி tkமீளப்பெற்றுக்கொள்ள (Refund) முடியும். அதாவது எதிர்பார்த்ததற்கு மாறாக வேறு ஒரு அப்பிளிக்கேஷனை கொள்வனவு செய்திருத்தில், கொள்வனவு செய்யப்பட்ட அப்பிளிக்கேஷன் முறையாக செயற்படாத சந்தர்ப்பங்கள் மற்றும் குறித்த அப்பிளிக்கேஷன் தேவைப்படாமை போன்ற சந்தர்ப்பங்களில் பணத்தினை மீளப்பெற்றுக்கொள்ள முடியும். 

 அப்பிளிக்கேஷன் கொள்வனவு செய்யப்பட்டு 48 மணி நேரத்தினுள் பணத்தினை மீளப்பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிக்க முடியும். எவ்வாறெனினும் இதற்கான தீர்மானத்தினை 15 நிமிடங்களுக்குள் எடுப்பது சாலச் சிறந்தது. இவ்வாறு விண்ணப்பித்தாலும் பணம் மீள வழங்கப்படுவதற்கு சில சமயங்களில் 4 வேலைநாட்களும் எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment