‘தமிழும் வளரணும் தமிழனும் வளரணும்’ கவிஞர் விவேகாவுடன் கவித்துவ சந்திப்பு - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Thursday, June 18, 2020

‘தமிழும் வளரணும் தமிழனும் வளரணும்’ கவிஞர் விவேகாவுடன் கவித்துவ சந்திப்பு

‘தமிழும் வளரணும் தமிழனும் வளரணும்’ கவிஞர் விவேகாவுடன் கவித்துவ சந்திப்பு 
thulirkalviஉலகமே கரோனாவோடு வாழப் பழகிக்கொள்ளத் தொடங்கிவிட்ட தருணத்தில், இயல்பான வாழ்க் கைக்கு எல்லோரும் திரும்பும் வரை இணையவழியே நம்மை இணைக்கும் வழி என்றாகிவிட்டது. 

இந்நிலையில், நம் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழானது தனித்தும் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்தும் இணையவழிக் கருத் தரங்குகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், ‘இந்து தமிழ் திசை’, கல்வியாளர்கள் சங்கமம், கோவை கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி இணைந்து ‘தமிழும் வளரணும், தமிழனும் வளரணும்’ எனும் தலைப்பில் இன்றைய தமிழ்த் திரையுலகில் மிகப் பிரபலமான பாடலாசிரியராகத் திகழும் கவிஞர் விவேகாவுடன் ஒரு கவித்துவ சந்திப்பை இணைய வழியில் ஏற்பாடு செய்துள்ளது. ‘பூங்குயில் பாட்டு பிடிச் சிருக்கா...’வில் தொடங்கி இன்று ரஜினியின் ‘அண்ணாத்த’ வரை இடைவிடாத உழைப்பாலும், திறமையாலும் உயர்ந்து நிற்கிறார் கவிஞர் விவேகாi. அவருடன் கலந்துரையாடுகிறார் எழுத்தாள ரும், ஆசிரியருமான ‘சிகரம்’ சதிஷ்குமார். 

இந்த நிகழ்வு நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 3 மணி முதல் மாலை 4.30 வரை ‘ஜூம்’ (ZOOM - ID: 6251621064, PASS WORD: TAMIL) செயலி வழியே நடைபெற உள்ளது. இக் கலந் துரையாடலில் அனைவரும் கட்ட ணமின்றி பங்கேற்கலாம். உங்கள் கேள்விகளை குறுஞ்செய்தி வழியே முன்வைக்கலாம். மேலும் தகவல் பெற 9994119002 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.‘இந்து தமிழ் திசைi’, கல்வியாளர்கள் சங்கமம், கோவை கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி இணைந்து இந்நிகழ்வை நடத்துகின்றன.
🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment