பொதுத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி சிஐஎஸ்சிஇ புதிய முடிவு - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Wednesday, June 17, 2020

பொதுத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி சிஐஎஸ்சிஇ புதிய முடிவு

பொதுத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி சிஐஎஸ்சிஇ புதிய முடிவு 

 ஊரடங்கால் ஒத்திவைக்கப் பட்ட ஐஎஸ்சி (பிளஸ் 2), ஐசி எஸ்இ (10-ம் வகுப்பு) பாடத்திட்ட பொதுத்தேர்வு எழுத மாணவர் களை கட்டாயப்படுத்தவில்லை என்று ஏற்கெனவே சிஐஎஸ்சிஇ விளக்கமளித்திருந்தது. 

இந்நிலையில் சிஐஎஸ்சிஇ தலைமை நிர்வாக அதிகாரி ஜெர்ரி அரதூண் வெளியிட்ட அறிவிப்பு: பொதுத்தேர்வு எழுத விரும் பும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வை எதிர்கொள்ள விரும்பாத வர்களுக்கு முந்தைய தேர்வு களின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும். 

பொதுத்தேர்வு எழுதுதல் மற்றும் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கு தல் தொடர்பாக தங்கள் கருத்து களை பள்ளி தலைமை ஆசிரி யரிடம் ஜூன் 22-க்குள் மாணவர் கள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment