இணையவழி வகுப்புகள் மாணவர்களிடம் ஏற்றத்தாழ்வு, பாகுபாட்டை ஏற்படுத்தும் பெற்றோரிடம் கருத்து கேட்க ஸ்டாலின் வலியுறுத்தல் - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Thursday, June 18, 2020

இணையவழி வகுப்புகள் மாணவர்களிடம் ஏற்றத்தாழ்வு, பாகுபாட்டை ஏற்படுத்தும் பெற்றோரிடம் கருத்து கேட்க ஸ்டாலின் வலியுறுத்தல்

இணையவழி வகுப்புகள் மாணவர்களிடம் ஏற்றத்தாழ்வு, பாகுபாட்டை ஏற்படுத்தும் பெற்றோரிடம் கருத்து கேட்க திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல் 

இணையவழி வகுப்புகள் மாணவர் களிடையே ஏற்றத்தாழ்வு, பாகு பாட்டை ஏற்படுத்தும். எனவே, இவ் வகுப்புகள் தொடர்பாக மாணவர் கள், பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும் என்று தமிழக அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். 

 இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரி வித்துள்ளதாவது: 

‘இணைய வழி வகுப்புகள் நடத்துவதற்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ள அதிமுக அரசு, திரைமறைவில் இணையவழி வகுப்புகளை அனுமதிக்கும் உள்நோக்கத்துடன் ஒரு குழுவை நியமித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 1 கோடியே 31 லட்சம் மாணவர்களில் 60 சதவீதம் பேர் கிராமப் பகுதிகளில் இருக்கிறார்கள். இணையவழிக் கல்விக்குத் தேவையான கணினி, மடிக்கணினி, ஸ்மார்ட் போன் போன்றவை கிராமப்புற மாணவர்களிடம் இல்லை. 

எனவே, இணையவழிக் கல்வி கிராம மாணவர்களுக்கும், நகரங்களில் உள்ள ஏழை, எளிய மாணவர் களுக்கும் பேராபத்தானது. கல்வி என்பது கற்றறிய வேண்டியது. அது பங்குச் சந்தை வியாபாரம் அல்ல என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும். பரஸ்பர ஆசிரியர்- மாணவர் கலந்துரையாடல் மூலம் உருவாக் கப்படும் கல்விதான் இந்நாட்டின் மிக முக்கியமான சொத்து.

  நிழல் நிஜமாகாது 

 இணையவழிக் கல்வி மாணவர் களுக்குத் தேவையில்லாத மன அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு, ஏற்றத்தாழ்வையும், பாகுபாடுக ளையும் உருவாக்கும். இணையவழி கல்வியைப் பொறுத்தவரை, மாணவர்களும்- பெற்றோர்களும் முக்கியப் பங்கு தாரர்கள். 

எனவே, இதுகுறித்து அவர்களிடம் கருத்து கேட்க வேண்டும். இணையவழிக் கல்வி முறை, வகுப்பறைக் கல்விக்கு மாற்று இல்லை. நிழல் நிஜமாகி விடாது என்பதை அதிமுக அரசு உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment