ரயில்வே வாரியத்தின் புதிய உத்தரவால் சிக்கல் தேர்வு அறிவிப்பு வெளியிடப்படுமா? - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

ரயில்வே வாரியத்தின் புதிய உத்தரவால் சிக்கல் தேர்வு அறிவிப்பு வெளியிடப்படுமா?

35 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு 1.26 கோடி பேர் விண்ணப்பம் ரயில்வே வாரியத்தின் புதிய உத்தரவால் சிக்கல் தேர்வு அறிவிப்பு வெளியிடப்படுமா? 

ரயில்வேயில் காலிப் பணியிடங் களுக்கு 1.26 கோடிக்கும் மேற்பட் டோர் விண்ணப்பித்த நிலையில், வாரியம் வெளியிட்டுள்ள உத்தர வால், தேர்வுகள் நடத்தப்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

 ரயில்வேயில் பல்வேறு பிரிவு களில் 35,208 காலிப் பணியிடங் களுக்கு ஆட்களை தேர்வு செய்ய கடந்த ஆண்டு ஏப்ரலில் ரயில்வே தேர்வாணையம் அறிவிப்பு வெளி யிட்டது. இந்த தேர்வுகளுக்கு 1.26 கோடிக்கும் மேற்பட்டோர் விண் ணப்பித்துள்ளனர். இருப்பினும் தேர்வுகள் நடத்தப்படவில்லை. 

இதற்கிடையே, கரோனா பாதிப் பைத் தொடர்ந்து, ரயில்வேயில் பல்வேறு சிக்கன நடவடிக்கை களை ரயில்வே மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, ரயில்வேயில் பாதுகாப்பு பிரிவைத் தவிர, மற்ற பிரிவுகளில் காலிப் பணியிடங் களை நிரப்புவதை பரிசீலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள் ளது. 

இந்த அறிவிப்பு விண்ணப்ப தாரர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தேர்வுகள் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக டிஆர்இயு துணைப் பொதுச்செயலாளர் மனோ கரன் கூறும்போது, ‘‘ரயில்வேயில் சிக்கனம் என்ற பெயரில் ஆட் குறைப்பு நடவடிக்கைகள் தொடங் கியுள்ளன. 

ரயில்வேயை தனியார் மயமாக்கும் வகையில் இத் தகைய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன. சமூக நலன் களுக்காக பல்வேறு சலுகைகள் வாயிலாக, மானியமாக ஆண் டுக்கு ரூ.35 ஆயிரம் கோடி ரயில்வே செலவிடுகிறது. இந்த செலவுகளை அரசு ஏற்றால் ரயில்வே லாபகரமான நிறுவனமாக மாறுடும். 

எனவே, ரயில்வேயில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும்’’ என்றனர். 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment