தீர்வை, பட்டா மாற்றம் குறித்த ஜமாபந்திக்கு ஆன்லைனில் மனு இணையதள முகவரி வெளியீடு - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Friday, June 26, 2020

தீர்வை, பட்டா மாற்றம் குறித்த ஜமாபந்திக்கு ஆன்லைனில் மனு இணையதள முகவரி வெளியீடு

தீர்வை, பட்டா மாற்றம் குறித்த ஜமாபந்திக்கு ஆன்லைனில் மனு இணையதள முகவரி வெளியீடு

ஜமாபந்தி மனுக்களை ஆன்லைன் வாயிலாக அனுப்புவதற்கான இணையதள முகவரியை வருவாய் நிர்வாக ஆணையரகம் வெளியிட்டுள்ளது. வருவாய்த் துறை தொடர்பான பட்டா மாற்றம் உள்ளிட்டவற்றுக் காக ஆண்டுக்கு ஒருமுறை ஜமா பந்தி நடத்தப்படுகிறது. 

இதில், மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்நிலை யில், புதிய வருவாய் பசலி ஆண்டு வரும் ஜூலை 1-ம் தேதி தொடங்க உள்ளது. தற்போதைய 2019-20-ம் பசலி ஆண்டு வரும் 30-ம் தேதி முடிவடைகிறது. இந்த ஆண்டுக்கு கிராமங்களில் தீர்வை, பட்டா மாற்றம் தொடர்பான வருவாய்க் கணக்குகள் ஜூன் 30-ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். 

 ஊரடங்கு காரணமாக ஜமா பந்தி பணிகள் முடிக்கப்பட வில்லை. எனவே, இந்த பசலி ஆண்டுக்கான தீர்வை மற்றும் பட்டா மாற்றம் தொடர்பான பொது மக்களின் கோரிக்கைகளை ஆன்லைன் அல்லது இ-சேவை மையங்கள் மூலம் ஜூன் 29 முதல் ஜூலை 15 வரை அளிக்கலாம் என்று வருவாய் நிர்வாக ஆணை யரகம் அறிவித்திருந்தது. 

 இந்நிலையில், ஜமாபந்தி மனுக்களை அனுப்புவதற்கான இணைதயள முகவரியை வரு வாய் நிர்வாக ஆணையர் கே.பணீந் திர ரெட்டி வெளியிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர்களுக்கு இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், அரசு இ-சேவை மையத்திலோ அல்லது பொதுமக் கள் தாங்களாகவே, ‘http://gdp.tn.gov.in/jamabandhi’ என்ற இணையதள முகவரி வாயிலா கவோ மனுக்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment