தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு ஓராண்டு நீட்டிப்பு கரோனா சிகிச்சையும் சேர்ப்பு - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Thursday, June 25, 2020

தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு ஓராண்டு நீட்டிப்பு கரோனா சிகிச்சையும் சேர்ப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு ஓராண்டு நீட்டிப்பு கரோனா சிகிச்சையும் சேர்ப்பு 

 தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ள தமிழக அரசு, கரோனா சிகிச்சை யையும் அதில் சேர்த்துள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 12 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். 

இவர் களுக்காக கடந்த 2016-ம் ஆண்டு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அறி விக்கப்பட்டது. இதில் அரசு ஊழி யர்கள், அவர்களது குடும்பத்தில் தகுதியானவர்கள் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வரை மருத்துவ சேவை பெறலாம். சிறப்பு சிகிச்சைகளுக்கு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் வரை மருத்துவ சேவைகளை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

 இந்த திட்டம் 2016-ம் ஆண்டு ஜூலை 1 முதல் 2020 ஜூன் 30 வரை யுனைடெட் இந்தியா இன்ஸ்யூ ரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் வரும் ஜூன் 30-ம் தேதியுடன் முடி வடைய உள்ள நிலையில் கரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு, காப்பீட்டு நிறுவனத்தின் ஒப்புதலையும் பெற்று மேலும் ஓராண்டுக்கு அதாவது 2021 ஜூன் 30-ம் தேதி வரை காப்பீட்டு திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், வருவாய், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், காவல்துறை என பல்வேறு துறை களின் பணியாளர்கள் முன்கள பணியாளர்களாக கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்கள பணியாளர்கள், தலைமைச் செய லக பணியாளர்கள் என பலரும் தற்போது தொற்றுக்கு ஆளாகி யுள்ள நிலையில், அவர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கரோனா சிகிச்சையை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

  குழு பரிந்துரை 

 இதுதொடர்பாக மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநர் பி.உமாநாத், கருவூலத் துறை ஆணையர் சி.சமயமூர்த்தி, நிதித் துறை இணை செயலர் அரவிந்த், பொது சுகாதார இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம் ஆகியோர் கொண்ட குழுவை அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. 

இந்தக் குழுவின் பரிந்துரைகள்படி, காப்பீட்டுத் திட்டத்தில் கரோனா சிகிச்சையும் சேர்க்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர் ஒருவர் கரோனா வால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெறும் நிலையில், வென்டிலேட்டர் பயன்படுத்தாத நிலையில் நாள் ஒன்றுக்கு ரூ.6,500-ம், வென்டி லேட்டர் பயன்படுத்தினால் ரூ.8,500-ம் வசூலிக்க அனுமதிக்கப் பட்டுள்ளது. 

தீவிர சிகிச்சை தேவைப்படாத நிலையில், ஏ-1 மற்றும் ஏ-2 பிரிவு மருத்துவமனை யில் தனி அறை சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு மருந்து செலவையும் சேர்த்து ரூ.9,500, ஏ-3 முதல் ஏ-6 பிரிவு மருத்துவமனைகளில் ரூ.7,500 கட்டணமாக வசூலிக்க லாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தீவிர சிகிச்சை பிரிவுக் கான பரிந்துரைக்கப்பட்ட கட்ட ணத்தை காப்பீட்டு நிறுவனம், மருத் துவமனைக்கு வழங்கும். இதற்காக அரசு ஊழியர்களுக்கு ரூ.5 கோடி யையும், ஓய்வூதியர்களுக்கு ரூ.2.5 கோடியையும் தொகுப்பு நிதியாக அரசு ஒதுக்கியுள்ளது. 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment