ஆசிரியர், தலைமையாசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு உடனடியாக நடத்த வேண்டும் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Monday, June 15, 2020

ஆசிரியர், தலைமையாசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு உடனடியாக நடத்த வேண்டும்


 நாமக்கல்: 

நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு வெளியிட்ட அறிக்கை: 

தமிழகம் முழுவதும் உள்ள, அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் கலந்தாய்வு, ஆண்டுதோறும் மே இறுதியிலோ அல்லது ஜூனிலோ நடத்தப்படுவது வழக்கம். தற்போது, கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் காரணத்தால், பள்ளி திறக்கும் நாள் இன்னும் உறுதி செய்யாத சூழல் உள்ளது. 

அதே நேரத்தில், கடந்த மே மாதம் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். அதனால், பள்ளிகள் திறக்கக்கூடிய சூழல் ஏற்படும்போது, பல பள்ளிகளில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் காலி பணியிடம் காணப்படும். 

மாணவர் நலன் பாதிக்காத வகையில், தமிழக அரசு, உடனடியாக அரசு பள்ளிகளில் பணியாற்றும், அனைத்து நிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் நலனுக்காகவும், அரசின் வேண்டுகோளுக்கு இணங்கியும், கடந்த மே கடைசி வாரத்தில் இருந்து, நடப்பு ஜூன் கடைசி வரை, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், போதிய சமூக இடைவெளியுடன், முன்னெச்சரிக்கை பாதுகாப்புடன், மாணவர்களின் பொதுத்தேர்வு விடைத்தாள்களை, மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அவற்றை, அரசு கவனத்தில் கொண்டு, ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வை, வரும் ஜூலையில் இணையவழி மூலம், சமூக இடைவெளியுடன், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு செயல்பாடுகளுடன் நடத்த முன்வர வேண்டும். 

ஒவ்வொரு ஆசிரியரும், தற்போது பணியாற்றும் பள்ளியில், கலந்தாய்வு நடக்கும் தேதிக்கு முன், ஒரு ஆண்டு பணியாற்றினாலே, பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என்பதை, முக்கிய விதியாக வெளியிட வேண்டும். நடப்பு ஆண்டில், பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு பிறகே, நிர்வாக மாறுதல் மூலம், பணியிடமாறுதல் வழங்க வேண்டும். 

காலிப்பணியிடங்கள் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், போட்டி தேர்வுக்கான அறிவிப்பையும், அரசு உடனடியாக வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment