ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த விதிகள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - துளிர்கல்வி

Latest

Search This Site

ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த விதிகள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த விதிகள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 

ஆன்லைன் வகுப்புகளை முறைப் படுத்த விதிகள் வகுப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா ஊரடங்கால் தனியார் பள்ளி, கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. 

ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவ, மாணவியரின் கவனம் அவ்வப்போது குறுக்கிடும் ஆபாச இணையதளங்கள் மீது திரும்புவதால் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

இதேபோல ஆன்லைன் வகுப்பு களில் பங்கேற்பதால் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கண்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு 2 மணி நேரம் மட்டுமே ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும் கோரி விமல்மோகன் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்குகளை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் விசாரித்தனர். 

அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் பிரபாகரன், ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி, ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களின் கவனம் திடீரென குறுக்கிடும் ஆபாச இணைய தளங்கள் பக்கம் திரும்பு வதாகவும், கண்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகவும் வாதிட்டனர். அப்போது மத்திய அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி இதுதொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கருத்துகளைப் பெற்று தெரிவிக்க 2 வாரம் அவகாசம் வேண்டும் எனக் கோரினார். 

அதேபோல தமிழக அரசுத் தரப்பில் பள்ளிக் கல்வித் துறை சிறப்பு அரசு வழக்கறிஞர் சி.முனுசாமி ஆஜராகி, எழும்பூர் கண் மருத்துவமனை டீனிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டும் எனத் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், மத்திய, மாநில அரசுகள் பதி லளிக்க உத்தரவிட்டு விசா ரணையை ஜூலை 6-க்கு தள்ளி வைத்தனர்.

போலீஸில் புகார் அளிக்கலாம் இந்த வழக்கில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் சைபர் சட்டப்பிரிவு சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது: ஊரடங்கு காலத்தில் மாணவர்களின் கல்வி எக்காரணம் கொண்டும் தடைபடக் கூடாது என்ற நோக்கில் ஆன்லைன் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆபாச இணையதளங்களைத் தடுப்பது தொடர்பான விதிகளை ஏற்கெனவே மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை உருவாக்கியுள்ளது. 

தேவையில்லாத வீடியோ அல்லது இணையதள இணைப்புகள் தொடர்பாக இந்திய கணினி அவசர சேவைக்குழு அவ்வப்போது எச்சரிக்கை விடுத்துக்கொண்டே இருக்கும். ஆன்லைன் வகுப்புகள் பாதுகாப்பான முறையில் நடைபெற இந்தக்குழு மத்திய, மாநில அரசுகளுக்கும் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. இவற்றையும் மீறி ஆபாச வீடியோக்கள் குறுக்கிட்டால் போலீஸில் புகார் அளிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment