பாடப்புத்தகங்களை முறையாக வினியோகிக்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - துளிர்கல்வி

Latest

Search This Site

பாடப்புத்தகங்களை முறையாக வினியோகிக்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பாடப்புத்தகங்களை முறையாக வினியோகிக்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு 

 2020-21-ம் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி நிறைவு பெற்று, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க உள்ள 3 கோடி புத்தகங்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. 

அங்கிருந்து பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் வினியோகிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி துறை இயக்குனர் ச.கண்ணப்பன் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தார். 

 இந்த நிலையில் சில மாவட்டங்களில் கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்களை எடுத்துச்செல்ல கூறுவதாகவும், தலைமை ஆசிரியர்கள் தங்களுடைய மோட்டார் சைக்கிளில் வைத்து பாதுகாப்பற்ற முறையில் புத்தகங்களை எடுத்துச்செல்வதாகவும் பள்ளிக்கல்வி துறைக்கு தகவல் வந்தது. 

இதையடுத்து, இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை, கல்வி அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அதில், ‘அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலக பணியாளர்கள் மற்றும் பள்ளியில் உள்ள அமைச்சு பணியாளர்கள் மூலமாகவே பாடப்புத்தகங்கள் முறையாக வினியோகிக்கப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment