கரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி? தமிழக அரசு வழிகாட்டு முறை வெளியீடு - துளிர்கல்வி

Latest

Search This Site

கரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி? தமிழக அரசு வழிகாட்டு முறை வெளியீடு

கரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி? தமிழக அரசு வழிகாட்டு முறை வெளியீடு 

 பொதுமக்கள், நோயாளிகள் கரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது பற்றியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் தொடர்பாகவும் தமிழக அரசு வழிகாட்டு முறைகளை வெளி யிட்டுள்ளது. 

  நீரிழிவு நோயாளிகள் 

 நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீரை முறையாக தயாரித்து பருக வேண்டும். பருப்பு வகை கள், முட்டையின் மஞ்சள் கரு, மீன், முழு தானியங்கள், பச்சை மற்றும் நார் சத்து மிகுந்த காய் கறிகளை உட்கொள்ள வேண்டும். மேலும் மஞ்சள், இஞ்சி, பூண்டு, சீரகம், வெந்தயம், சுக்கு, மிளகு போன்றவற்றை உணவில் சேர்த் துக்கொள்ள வேண்டும். வாரம் ஒருமுறை சர்க்கரை அளவை பரிசோதனை செய்ய வேண்டும். கால் பாதங்களை முறையாக பராமரிக்க வேண்டும். 

  இதய நோயாளிகள்

எளிமையான மற்றும் குறுகிய நடைப்பயிற்சிகள், சுவாச பயிற்சி கள் அவசியம். தினமும் 8 மணி நேரம் உறங்க வேண்டும். இதய செயலிழப்பு நோய் உள்ள வர்கள், உப்பு மற்றும் நீர் கட்டுப் பாடுகளை அவசியம் பின்பற்ற வேண்டும். மாரடைப்பு நோய்க்கான கொரோனரி ஸ்டெண்டுகள் பொருத்தப்பட்ட நோயாளிகள் தங் களது மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். காய் கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். 

  சிறுநீரக நோயாளிகள் 

 சிறுநீரக நோய் உள்ளவர்கள், குறிப்பாக சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள், சாதாரண நபர்களை காட்டிலும் அதிக பாதிப்புக்கு உள்ளாக வாய்ப் புகள் அதிகம். எந்த காரணத் துக்காகவும் டயாலிசிஸ் சிகிச் சையை தவிர்க்கக் கூடாது. தவிர்த்தால் உயிருக்கு ஆபத்தாக முடியும். நோயாளிகளின் சார்பில் வரும் நபரிடம், ஒரு மாதத்துக்கான மருந்துகள் வழங்கப்படும். 

  கர்ப்பிணிகள் 

 தொண்டை கரகரப்பு, வலி, இருமல் மற்றும் காய்ச்சல் மூச்சு விடுவதில் சிரமம் தீவிர தொற் றாகும். கர்ப்ப காலத்தில் நீரிழிவு, ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம், இதய வியாதி உள்ளவர்களுக்கு அதிக ஆபத்துகள் உள்ளன. கர்ப்பிணிகளுக்கான வளை காப்பு நிகழ்ச்சியில் 10 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். குழந் தைக்கு பாலுாட்டுவதற்கு முன், மார்பகம், மற்றும் கைகளை சுத்தப்படுத்த வேண்டும். 

  முதியவர்கள் 

 வீட்டை விட்டு வெளியே செல் வதை தவிர்க்க வேண்டும். வயதானவர்களுக்கு தாகம் குறைவாக இருப்பின், போதுமான அளவு வெதுவெதுப்பான தண் ணீரை அடிக்கடி குடிக்க வேண்டும். சூடாக சமைத்த சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். காய் கறிகள் மற்றும் பழங்கள், வைட்ட மின் சி நிறைந்துள்ள ஆரஞ்சு, கொய்யா, எலுமிச்சை, நெல்லிக் காய் போன்றவற்றை சாப்பிட வேண்டும். சமைக்கும் போது, மஞ்சள், சீரகம், பூண்டு, இஞ்சி, வெங்காயம் போன்றவற்றை சேர்ப் பதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

  குழந்தைகள்

குழந்தைகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; மூச்சு விடுவதற்கான சிரமத்தை தவிர்க்க, பெற்றோர் கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுக்கென தனியாக தட்டுகள், டம்ளர்களை உபயோகிக்க வேண்டும். அவற்றை உபயோகித்த பின், கொதிக்கும் நீரில் நன்றாக கழுவ வேண்டும். தினமும் வீட்டை சுத்தப்படுத்துவதுடன், 

அதிகமாக உபயோகப்படுத்தக்கூடிய பொருட் கள், கதவு, தாழ்ப்பாள்கள், தண் ணீர் குழாய்கள் ஆகியவற்றை சுத்தப்படுத்த வேண்டும். யோகா, உடற்பயிற்சியுடன், முட்டை, பருப்பு வகைகளை உணவில் சேர்க்க வேண்டும். எய்ட்ஸ் நோயாளிகள் காசநோயாளிகள் 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment