அழகுக்கு அழகு சேர்க்கும் உணவுகள் - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Monday, June 22, 2020

அழகுக்கு அழகு சேர்க்கும் உணவுகள்

அழகுக்கு அழகு சேர்க்கும் உணவுகள்

வெயில் காலம் வந்தாலே சருமப் பிரச்னைகளும் கூடவே வர ஆரம்பித்துவிடும். இந்த நேரத்தில் சருமத்தை முறையாகப் பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக வெயில் காலங்களில் உடல் சூட்டைத் தணிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். 

அப்படி நாம் சாப்பிடுகிற உணவானது உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு மட்டுமல்லாமல் சருமத்துக்கு நன்மை தருவதாகவும் இருக்க வேண்டும். உடல் மற்றும் சரும ஆரோக்கியத்துக்குக் கைகொடுக்கும் சூப்பர் உணவுகளை இதோ உங்களுக்காகத் தருகிறார் அழகுக் கலை நிபுணர் வசுந்தரா. 

 பனீர் டிக்கா மசாலா 

தேவையானவை: 

 பனீர் - 100 கிராம் 

 வெங்காயம் – ஒன்று 

 தக்காளி – ஒன்று தயிர் - ஒரு கப் 

 வெண்ணெய் – ஒரு டீஸ்பூன் 

 சீரகத்தூள் - 2 டீஸ்பூன் 

 மல்லித்தூள் - 2 டீஸ்பூன் 

 கரம் மசாலாத்தூள் - 2 டீஸ்பூன் 

 மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன் 

 மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் 

 எண்ணெய் – ஒரு டீஸ்பூன் 

 எலுமிச்சைச்சாறு – ஒரு டீஸ்பூன் 

 கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன் 

 உப்பு – அரை டீஸ்பூன்  செய்முறை: 

பனீர், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். 

குடமிளகாய் இருந்தால் அவற்றையும் பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். தயிரில் சீரகத்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், எண்ணெய், எலுமிச்சைச்சாறு, கடலை மாவு எல்லாவற்றையும் சேர்த்து தோசை மாவுப் பதத்துக்கு கலந்துகொள்ளவும். 

இந்தக் கலவையில், தேவையான உப்பு மற்றும் நறுக்கிவைத்த பனீர், வெங்காயம், தக்காளி, குடமிளகாய் ஆகிய அனைத்தையும் சேர்த்துக் கலந்து குறைந்தது ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும். கிரில் செய்வதற்குப் பயன்படுத்துகிற நீளமான குச்சியை எடுத்துக்கொள்ளவும். 

அதில் கலவையில் ஊறவைத்த பனீர், தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக மாறி மாறி செருகவும். ஒரு தவாவைச் சிறிது வெண்ணெய் தடவிச் சூடாக்கவும். பின்னர் இந்த பனீர் ஸ்டிக்கை தவாவில் வைக்கவும். இதன் ஒவ்வொரு பக்கத்தையும் மிதமான சூட்டில் இரண்டு நிமிடங்களுக்கு வேகவைத்து எடுக்கவும்.
பனீரில் குறைந்த அளவு கொழுப்பே உள்ளது. ஆனால், புரதச்சத்து அதிகம். சரும ஆரோக்கியத்துக்குப் புரதம் மிகவும் நல்லது. தக்காளியும் வெங்காயமும் உடலுக்குக் குளிர்ச்சி தரும் தன்மை கொண்டவை. வெங்காயத்தில் சல்ஃபர் அதிகம் இருப்பதால் கூந்தல் ஆரோக்கியத்துக்கு மிகவும் ஏற்றது.
🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment