5-ந் தேதி நடைபெற இருந்த மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு ஒத்திவைப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

5-ந் தேதி நடைபெற இருந்த மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு ஒத்திவைப்பு

5-ந் தேதி நடைபெற இருந்த மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு ஒத்திவைப்பு 

சி.பி.எஸ்.இ, நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (சிடெட்) நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சிடெட் தேர்வு ஜூலை மாதம் 5-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

 இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக வருகிற 5-ந் தேதி நடைபெற இருந்த மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் போக்ரியால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ. நடத்தும் சிடெட் தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

நிலைமை சாதகமாக அமைந்தால் தேர்வுக்கான அடுத்த தேதி பின்னர் அறிவிக்கப்படும்“ என தெரிவித்துள்ளார். 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment