மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு தள்ளிவைப்பு - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Tuesday, June 23, 2020

மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு தள்ளிவைப்பு

மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு தள்ளிவைப்பு 

 மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் வரும் ஜூலை 9-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. 

 தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி அதிமுக, திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி களும், தமிழக அரசும் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள் ளன. இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது. 

மத்திய அரசும் இதற்கு பதில்மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ் ணன் ராமசாமி ஆகியோர் அடங் கிய அமர்வில் நேற்று விசார ணைக்கு வந்தது. 

  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு... 

 அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, இதே இடஒதுக்கீடு தொடர்பான சலோனிகுமார் வழக்கு ஏற்கெ னவே உச்ச நீதிமன்றத்தில் தொடரப் பட்டு வரும் ஜூலை 8-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. எனவே இந்த வழக்கு விசார ணையை தள்ளிவைக்க வேண்டும் என கோரினார். 

 அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக் கீடு கோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு களுக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சலோனிகுமார் வழக்கு எந்த விதத்திலும் சட்ட ரீதியாக தடையாக இருக்காது. 

இடஒதுக்கீட்டை கடைபிடிப்பதில் மாநிலங்கள் மத்திய தொகுப்புக்கு ஒப்படைக்கும் இடங்களில் மத்திய அரசு இருவேறு நிலைப்பாட்டை எடுக்க முடியாது. மத்திய அரசு தற்போது தாக் கல் செய்துள்ள பதில்மனுவில் மாநில அரசு கோரும் இடஒதுக் கீட்டுமுறையை அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிவித்துள் ளது. 

எனவே உயர் நீதிமன்றமே இந்த வழக்கை விரைவாக விசா ரித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என வாதிட்டார். இதே போல பிற வழக்கறிஞர்களும் வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூலை 9-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர். 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment