பள்ளி மாணவர்களுக்கான 4-வது வானியல் முகாம் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Friday, June 26, 2020

பள்ளி மாணவர்களுக்கான 4-வது வானியல் முகாம்

இந்து தமிழ் திசை’ - ‘ஸ்பேஸ் சயின்ஸ் லேர்னிங் கிளப்’ சார்பில் பள்ளி மாணவர்களுக்கான 4-வது வானியல் முகாம் 

ஜூன் 29 முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘ஸ்பேஸ் சயின்ஸ் லேர்னிங் கிளப்’புடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான 4-வது வானி யல் முகாம் வரும் 29-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. கரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பள்ளி மாண வர்களுக்காக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ‘ஸ்பேஸ் சயின்ஸ் லேர்னிங் கிளப்’புடன் இணைந்து இதுவரை 3 வானியல் முகாம்களை நடத்தியுள்ளது. 

 இந்த ஆன்லைன் முகாம்களில் 4 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகள் பங்கேற்ற னர். வானியல் பயிற்சியாளர் வினோத்குமார் கலந்துகொண்டு வானியல் குறித்த அடிப்படை விவரங்கள், வானில் நிகழும் முக்கிய நிகழ்வுகள், பிரபஞ்சம், பால்வெளி மண்டலம், கோபர் நிகஸ், கலிலியோ உள்ளிட்ட வானி யலாளர்களின் கோட்பாடுகளை விளக்கிக் கூறினார். இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.  

மாணவர்கள்வேண்டுகோள் இந்நிலையில் ஏராளமான மாணவ, மாணவியரின் வேண்டு கோளை ஏற்று 4-வது வானியல் முகாம் வரும் 29 முதல் ஜூலை 1-ம் தேதி வரை 3 நாட்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினமும் மாலை 5 மணி முதல் 6 மணிவரை நடைபெறும் இம் முகாமில் பங்கேற்க லேப்டாப், ஆண்ட்ராய்டு போன் அவசியம். 

 இந்த முகாமை ஸ்பேஸ் சயின்ஸ் லேர்னிங் கிளப் நிறுவனர் வினோத்குமார் நடத்துகிறார். பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பதிவுக் கட்டணமாக ரூ.294/- செலுத்தி https://connect.hindutamil.in/Astronomy.php என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9003966866 என்ற செல்பேசி எண் ணில் தொடர்புகொள்ளலாம். 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment