ரூ.37 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை - துளிர்கல்வி

Latest

Search This Site

ரூ.37 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை

புதிய உச்சத்தை தொட்டது ரூ.37 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை 

ஒரே நாளில் பவுனுக்கு 440 உயர்வு கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த காலத்திலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் இருந்தது. இந்த அட்சய திருதியையொட்டி நகைக்கடைகள் திறந்திருக்கவில்லை என்றாலும், ஆன்லைன் மூலம் தங்கத்தை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ள நகைக்கடைக்காரர்கள் புது உத்தியை கையாண்டனர்.

இந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனே இருந்து வருகிறது. அதிலும் கடந்த வாரம் முழுவதும் ஒரு நாள் விலை உயர்ந்தும், மறுநாள் விலை அதிகரித்த வண்ணம் இருந்தது. 

அந்தவகையில் நேற்று தங்கம் விலை உயர்ந்து காணப்பட்டு, புதிய உச்சத்தையும் தொட்டு இருக்கிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 553-க்கும், ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 424-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலைநேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.55-ம், பவுனுக்கு ரூ.440-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 608-க்கும், ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 864-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்த விலை உயர்வு தொடரும் பட்சத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் ஒரு பவுன் தங்கம் ரூ.37 ஆயிரத்தை கடந்துவிடும். ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரையிலான 6 மாத காலத்தில் மட்டும் பவுனுக்கு ரூ.7 ஆயிரம் வரை உயர்ந்து இருக்கிறது குறிப்பிடத்தக்கது. 

தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் ஏற்ற, இறக்கத்துடன் இருக்கிறது. நேற்று அதன் விலை அதிகரித்து இருந்தது. கிராமுக்கு 30 காசும், கிலோவுக்கு ரூ.300-ம் உயர்ந்து, ஒரு கிராம் 53 ரூபாய் 40 காசுக்கும், ஒரு கிலோ ரூ.53 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment