பிளஸ் 2 மாணவர்களுக்கான இணையவழி ‘நீட்’ பயிற்சி முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

பிளஸ் 2 மாணவர்களுக்கான இணையவழி ‘நீட்’ பயிற்சி முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

பிளஸ் 2 மாணவர்களுக்கான இணையவழி ‘நீட்’ பயிற்சி முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார் 

 பள்ளிக்கல்வித் துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பிளஸ் 2 மாணவர் களுக்கு நீட்-2020 போட்டித் தேர்வுக் கான இணையவழி பயிற்சி வகுப்பை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். 

 இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

 தற்போது கரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலை உள்ளது. இதனால், பிளஸ் 2 மாணவர் களுக்கு நீட்-2020 போட்டித் தேர்வுக் கான இணையவழி கட்டணமில்லா பயிற்சியை வழங்க ஆம்பிசாப்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் பள்ளிக்கல்வித் துறை ஒப்பந்தம் செய்துள்ளது. 

 இப்பயிற்சியை பெற இதுவரை 7,420 மாணவர்கள் பதிவு செய்துள் ளனர். ஆம்பிசாப்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தால் இணையதளம் மூலம் ஒவ்வொரு நாளும் இயiற் பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுக்குi தலா ஒரு மணி நேரம் வீதம் 4 மணி நேர பயிற்சியும், பயிற்சி முடிந்தவுடன் அன்றே ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு மணி நேரம் வீதம் 4 மணி நேரம் பயிற்சித் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. 

 இந்த நீட் இணையவழி தேர்வுத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிiயில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் iகே.ஏ.செங்கோட்டையன், தலை மைச் செயலர் க.சண்முகம், பள்ளிக் கல்வித் துறை செயலர் தீரஜ்குமார், ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், பள்ளிக்கல்வி இயக் குநர் கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment