பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம் - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Tuesday, June 23, 2020

பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்


பிளஸ் டூ பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் தயாரிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அந்தப் பணிகளை வரும் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு மார்ச் 24ஆம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து CORONA காரணமாக விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கிருமிநாசினி, சமூக இடைவெளி உள்பட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் தமிழகம் முழுவதும் கடந்த மே 27ம் தேதி தொடங்கி ஜூன் 10ஆம் தேதி முடிவடைந்தது. 

இந்த பணியில் 38 ஆயிரத்து 108 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர் 46.17 லட்ச விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. இதையடுத்து திருத்தப்பட்ட விடைத்தாள்களில் உள்ள மதிப்பெண்களை பட்டியல் இடும் பணிகள் நடைபெற்றன. பின்னர் விடைத்தாள் திருத்தும் மையங்களில் இருந்து மாவட்ட அலுவலகத்திற்கு வந்த மதிப்பெண் பட்டியலை சரிபார்த்து அதை தேர்வு துறை அலுவலகத்துக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. தேர்வு துறை அலுவலகத்தில் மாணவர்களின் மதிப்பெண்ணை சரிபார்த்து அவர்களின் பதிவு எண்களை பயன்படுத்தி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment