தமிழக அரசின் ‘அப்துல் கலாம் விருது’க்கு ஜூலை 15-க்குள் விண்ணப்பம் உயர்கல்வித் துறை அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Monday, June 22, 2020

தமிழக அரசின் ‘அப்துல் கலாம் விருது’க்கு ஜூலை 15-க்குள் விண்ணப்பம் உயர்கல்வித் துறை அறிவிப்பு

தமிழக அரசின் ‘அப்துல் கலாம் விருது’க்கு ஜூலை 15-க்குள் விண்ணப்பம் உயர்கல்வித் துறை அறிவிப்பு 

 அறிவியல் வளர்ச்சி, மனிதவியல், மாணவர்கள் நலன் ஆகிய துறை களில் சாதனை புரிந்தவர்கள் தமிழக அரசின் அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அறிவித் துள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் அபூர்வா வெளியிட்டுள்ள அறிவிப் பில் கூறியிருப்பதாவது: 

அறிவியல் வளர்ச்சி, மனித வியல், மாணவர்கள் நலன் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோ ருக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டு தோறும் ‘டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்’ விருது வழங்கப்பட்டு வருகிறது. 

தமிழகத்தைச் சேர்ந் தவர்கள் மட்டுமே இந்த விருதுக்கு தகுதியுடையவர்கள். இந்த விருது ரூ.5 லட்சம் காசோலை, ஒரு பவுன் தங்கப்பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக் கியது. 

இந்த விருதுக்கான விண்ணப் பத்தை, விரிவான தன் விவரக் குறிப்பு, உரிய விவரங்கள், அதற் கான ஆவணங்கள் ஆகியவற்றை ‘அரசு முதன்மைச் செயலர், உயர் கல்வித் துறை, தலைமைச் செயல கம், சென்னை 600 009’ என்ற முகவரிக்கு ஜுலை மாதம் 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 

தமிழக அரசால் நியமிக்கப்படும் தேர்வுக் குழு விருதுக்குரியோரை தேர்வு செய்யும். சுதந்திர தின விழாவின்போது முதல்வரால் விருது வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment